குரு பெயர்ச்சியால் மே 1 -ல் இருந்து இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது..! அதிர்ஷ்டம் மழையாக கொட்டப்போகிறது..!

Advertisement

குரு பெயர்ச்சி யாருக்கு அதிர்ஷ்டம் | Lucky Signs Due To Transit Of Guru in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் ஆன்மிகம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். அதாவது இன்று நாம் நம் பதிவின் வாயிலாக குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்லும் போது, சில ராசிகளுக்கு நன்மைகளையும், தீமைகளையும் கொடுக்கிறது. அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் தான் பயணம் செய்து கொண்டு இருக்கிறார். அதனை தொடர்ந்து குரு பகவான் மே 1 ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் 12 ராசிகளில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மழையாக கொட்டப்போகிறது. சரி வாங்க நண்பர்களே அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.

சோமாவதி அமாவாசையில் சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார்..? 

கும்ப ராசி: 

தற்போது குரு பகவான் கும்ப ராசியில் நான்காம் வீட்டில் தான் நுழைகிறார். இதனால் உங்களுக்கு பல நற்பலன்கள் கிடைக்கப்போகிறது. நீங்கள் தொடங்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். நினைத்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக காணப்படும். உங்களின் திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

கன்னி ராசி: 

கன்னி ராசிக்காரர்களின் 9 ஆம் வீட்டில் தான் குரு நுழையப் போகிறார். 9 ஆம் வீட்டில் இருந்து குருவின் பார்வை உங்கள் ராசியில் விழும். இதனால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குருவின் யோகத்தால், பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். இது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நேரம்.

சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் துரத்தப்போகும் ராசிகள் இவர்கள் தானா

விருச்சிக ராசி: 

குருவின் இந்த மாற்றத்தால், விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். இந்த நேரத்தில் வீடுகட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மே மாதத்தில் புதிதாக நிலம் வாங்கவேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரம் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் அதிகமாக வரும். குருவின் மாற்றத்தால் பதவி உயர்வு கிடைக்கும்.

மேஷ ராசி: 

குருவின் மாற்றத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க போகிறது. உங்களின் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் அடியோடு மாறப்போகிறது. இந்த நேரத்தில் சொந்தமாக வீடு, நிலம் வாங்குவீர்கள். உங்களின் வீட்டில் குருவின் மாற்றத்தால் சுப நிகழ்ச்சிகள் உண்டாகப்போகிறது.

என்னது இந்த ராசிக்காரர்கள் துரோகம் செய்வார்களா.. அப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement