Pisces Lucky Things in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்கள் இருக்கும். ஆன்மீகத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளது. இந்த 12 ராசிகளில், கடைசி ராசியாக இருப்பது மீன ராசி. மீன ராசிக்குரிய அதிஷ்டமானவை எவை என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் மீன ராசியாக இருந்தால் இப்பதிவினை படித்து, உங்கள் ராசிக்கான Lucky Things பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மீன ராசியின் அதிஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட கல் மற்றும் அதிர்ஷ்ட தொழில் உள்ளிட்ட பலவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மீன ராசி:
12 ராசிகளில் கடைசி ராசியாக அதாவது, 12 ஆவது ராசியாக இருப்பது மீன ராசி ஆகும். மீன ராசிகளுக்கு அதிர்ஷ்ட உறுப்பு தண்ணீர் ஆகும். மீன ராசி மீன் சின்னத்துடன் இருக்கக்கூடியது. அதாவது, 2 மீன்கள் எதிர் திசையில் நீந்துவது போல் இருக்கும். மீன ராசியை ஆளும் கிரகம் வியாழன் (குரு) ஆகும். மீன ராசிக்குரிய நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் ஆகும்.
Lucky Things for Pisces in Tamil:
அதிர்ஷ்ட நிறம் | கடல் பச்சை |
அதிர்ஷ்ட எண் | 3 மற்றும் 7 |
அதிர்ஷ்ட கல் | சிவப்பு பவளம், |
அதிர்ஷ்ட நாட்கள் | 4, 13, 22 மற்றும் 31 |
அதிர்ஷ்ட கிழமை | செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு |
அதிர்ஷ்ட எழுத்துக்கள் | H, N, Y, D, மற்றும் C, H |
அதிர்ஷ்டமான சோல் மேட்ஸ் | கடகம், விருச்சிகம் |
அதிர்ஷ்டமான பிசினஸ் பார்ட்னர் | கடகம் |
அதிர்ஷ்டமான தொழில் | மருத்துவம் தொடர்பான துறைகள், நீர் தொடர்பான வேலைகள், கற்பித்தல், பாதிரியார்கள், ஆலோசனை வேலைகள், ஊடகம் தொடர்பான துறைகள், அரசியல், மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற தொழில்கள் அதிஷ்டம் அளிக்கக்கூடியவை. |
மீன ராசி நற்குணங்கள்:
மீன ராசிக்காரர்கள் எப்போதும், கருணை குணம் கொண்டவர்களாகவும் படைப்பு, கலை, உள்ளுணர்வு, மற்றும் புத்திசாலி தனத்துடன் செயல்படுபவர்கள். மேலும், இவர்கள் இசையில் அதிக ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் மென்மையான முறையில் நடந்து கொள்வார்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள்..!
மீன ராசி தீயகுணங்கள்:
மீன ராசிக்காரர்கள் பெரும்பாலான நேரங்களில் பயம், அதீத நம்பிக்கை, சோகம் மற்றும் உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணத்துடன் இருப்பார்கள்.
மீன ராசி நட்பு:
மேஷம், கடகம், சிம்மம், தனுசு ராசிக் காரர்கள் இவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக் காரர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்.
மீனம் குடும்பம்:
மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையானது நிம்மதியாக இருக்க கூடும். வீட்டில் இருக்க கூடியவர்களிடம் சந்தோசமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வாழ கூடியவர்களாக இருப்பார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |