Lucky Things For Virgo in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக ஜோதிடத்தினபடி ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்டமான பொருட்கள் என்பது இருக்கும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் 12 ராசிகளில் ஒன்றான கன்னி ராசிக்கு அதிர்ஷ்டமான பொருட்கள் என்ன என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கன்னி ராசி என்பது மிகவும் நல்ல ராசி. கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமானவர்களாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. அதனை தெரிந்துவைத்துக்கொள்வதன் மூலம் அதிர்ஷ்டமான பலன்களை பெறலாம். எனவே, நீங்கள் கன்னி ராசிக்காரர்களாக இருந்தால் இப்பதிவினை படித்து உங்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி ராசி:
12 ராசிகளில் 6 -வது ராசியாக இருப்பது கன்னி ராசி ஆகும். கன்னி ராசி வயிறு மற்றும் குடல் பாகங்களுடன் இருக்கும். கன்னி ராசியின் அதிபதி கிரகம் புதன் ஆகும். கன்னி ராசியில் 150 முதல் 180 வரையிலான சக்கரத்தின் ஆரங்கள் இதில் அடங்கும். கன்னி ராசிக்குரிய கடவுள் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இந்த ராசிக்காரர்கள் திறமையான பேச்சின் மூலம் அதிக நண்பர்களை உருவாக்கி கொள்வார்கள். கன்னி ராசிக்குரிய நட்சத்திரம் உத்திரம் அஸ்தம் மற்றும் சித்திரை நட்சத்திரம் ஆகும்.
கன்னி ராசி 2024 எப்படி இருக்கும்
கன்னி ராசிக்கு அதிர்ஷ்டமானவை:
- அதிர்ஷ்ட எண் – 5, 6 மற்றும் 2
- அதிர்ஷ்ட கல் – மஞ்சள் மற்றும் நீலக்கல்
- அதிர்ஷ்ட நாட்கள் – திங்கள், புதன் மற்றும் வியாழன்
- அதிர்ஷ்ட நிறம் – பச்சை, வெள்ளை, சாம்பல், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
- அதிர்ஷ்ட எழுத்துக்கள் – கே, ஈ, பி, ஜி, எச், ஐ ( K, E, B, G, H, I)
- அதிர்ஷ்டமான சோல் மேட்ஸ் – ரிஷபம் மற்றும் மகரம் ராசிக்காரர்கள்
- அதிர்ஷ்டமான பிசினஸ் பார்ட்னர் – மகரம்
- அதிர்ஷ்டமான தொழில் – ஆசிரியர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், வேதியியலாளர், நீதிபதிகள், பேக்கர்கள், உணவு வழங்குபவர்கள் மற்றும் உணவகம் அல்லது ஹோட்டல் தொடர்பான தொழில்கள் சிறந்தது.
கன்னி ராசி நற்குணங்கள்:
கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு, திறமை, மன சுறுசுறுப்பு மற்றும் லட்சியத்துடன் வாழக்கூடியவர்கள். இவர்கள் எப்போதும் ஒரு துடிப்பான எண்ணங்களுடனும் பிடிவாத குணத்துடன் சாதிக்க நினைப்பவர்கள்.
கன்னி ராசி தீய குணங்கள்:
கன்னி ராசிக்காரர்கள் அதிக உணர்திறன் மிக்கவர்களாகவும் மற்றும் சுயநலம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்டமற்ற கற்கள் சிவப்பு பவளம் கற்கள் ஆகும்.
12 ராசிகளுக்குரிய கடவுள்கள் மற்றும் அதிபதி கிரகங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |