சூரிய கிரகண பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, இந்த சர்வ பித்ரு அமாவாசை அனைத்து ராசிக்காரர்களுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலன்களை வழங்க கூடியது. 2023-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 14 சனிக்கிழமை நிகழவுள்ளது. அன்றைய கிரகணத்தின் அன்று சர்வ பித்ரு அமாவாசை வருவதால் பல அற்புதமான பலன்களை வழங்குகிறது. இந்த வருடத்தின் கடைசியில் வரும் சூரிய கிரகணத்தால் 5 ராசிக்காரர்களுக்கு அருப்புதமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 5 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கடைசி சூரிய கிரகணத்தால் மேன்மை அடைய போகும் ராசிகள்:
மிதுனம்:
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன்களை வழங்கும். இந்த சூரியனின் பார்வையால் நிதி நிலைமை மேம்படும். மன அமைதி அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையால் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களின் நிலை உயரும்.
சிம்மம்:
சூரியபகவானின் பார்வையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்க்காத முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகள் வெற்றி பெரும். ஆரோக்கிய தொல்லை நீங்கும். பண வரவு அதிகரிக்கும்.
துலாம்:
இந்த சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் கிரகணமாக இருக்கும். அன்பான உறவுகள் அதிகரிக்கும். உங்கள் தொழில் வெற்றி அடையும். சமூக வட்டத்தில் உங்களுக்கான மதிப்பும் செல்வாக்கும் உயரும். பணியிடத்தில் பதவி உயர்வும் செல்வாக்கும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கும் அதிஷ்டம் உள்ளது.
விருச்சிகம்:
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும். நிதி பிரச்சனை குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
இந்த கிரகணம் மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். உங்கள் செல்வ நிலை மேம்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் பாக்கியம் உண்டு. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |