வீட்டு வாசலில் மாவிலை தோரணம் ஏன் கட்டுகிறார்கள் தெரியுமா.?

Advertisement

மாவிலை தோரணம் கட்டுவது ஏன்

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிக பதிவில் மாவிலை தோரணம் காட்டுவது ஏன், இவை எதற்காக கட்டப்படுகிறது  என்று நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.  பொதுவாக நம் வீட்டில் ஏதேனும் நல்ல விசேஷங்கள் நடந்தாலும் அல்லது பண்டிகைகள் வந்தாலும் இந்த மாவிலை தோரணங்கள் கட்டப்படுகிறது.  அதேபோல் கோவில்களில்  நடக்கும் விசேஷங்களில் மாவிலை தோரணங்கள் அதிகமாக இருக்கும். மேலும் இவை ஏன் கட்டப்படுகிறது  என்பதை பற்றி ஆன்மிகம் ரீதியாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இதை செய்யுங்கள்! நல்லதே நடக்கும்!

Maavilai Thoranam Kattuvathu Yen:

பொதுவாக நாம் அதிகம் கடவுளுக்கு உகந்ததாக வேப்பமரத்தையும், அரச மரத்தையும் கடவுளாக வழிப்பட்டு வந்தாலும்,  ஆனால் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு மாவிலையை மட்டும் தோரணமாக கட்டுகிறோம். இந்த மாவிலை தோரணங்கள்  ஏன் கட்டப்படுகிறது என்று அறிந்துகொள்ளாமல், நம்  முன்னோர்கள் இதை காலகாலமாக செய்துவருவதால் நாமும் இதை தொடர்ந்து செய்துவருகிறோம்.

இந்த மாவிலை தோரணங்கள் எதற்காக கட்டப்படுகிறது என்றால், மாவிலை ஒரு புனிதமான இலை என்று சொல்லப்படுகிறது. இதை வீட்டு வாசலில் கட்டுவதால் கெட்ட விஷயங்களை வெளியேற்றி நல்ல விஷயங்களை உள்வாங்குவதற்காக கட்டப்படுகிறது.  பல தீமைகளில் இருந்தும் பாதுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மாவிலை தோரணம் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்:

பொதுவாகவே கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ மாவிலைகளை கலசத்தில் வைத்து, அதில் மஞ்சள் குங்குமம் போன்ற தண்ணீர்களை தெளிப்பார்கள். இவை இந்து மாதங்களில் ஒரு முக்கிய சடங்குகளாக இருக்கிறது.

திருமண வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டுவதால் அந்த மணப்பெண்ணும், மணமகனும், அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளும் மற்றும் அவர்களுக்கு பின்னல் வரப்போகிற சந்ததியினருக்கும் பல நன்மைகளுடனும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கட்டப்படுகிறது.

மாம்பழம் , மா மரத்தின் இலைகளும் பல கடவுளின் அவதாரமாக இருப்பதால் எனவே  இந்து மதத்தில் உள்ளவர்கள் இந்த மாவிலை தோரணத்தை கட்டுகிறார்கள், இதை கட்டுவதினால் பார்வதி, சிவபெருமான்,  பிள்ளையார் மற்றும் முருகன் போன்ற கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதோடு வீட்டு வாசலில் மாவிலையை கட்டுவதால் மகாலட்சுமி அதனை வாசம் செய்வதால், வீட்டில் இருக்கும் கெட்ட  சக்திகளை விரட்டி, வீடுகளில் நல்ல பலன்களை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மாவிலையை கட்டுவதினால் அவற்றை சுற்றிலும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருப்பதற்காக நம்முடைய முன்னோர்கள் மாவிலை தோரணத்தை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

 

 

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள் 
Advertisement