பெண்களுக்கு கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்..! Macha Palangal in Tamil..!

கை விரல்களில் மச்சம் இருந்தால் என்ன பலன்..! Kai Viral Macham Palan..!

Kai Macham Palan/ Macha Sastram: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் பெண்களுக்கு கை பகுதிகளில் எந்தெந்த இடங்களில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன் என்று தனித்தனியாக தெரிந்துகொள்ளலாம். நம்முடைய உடலில் இயற்கையாக இருக்கும் மச்சத்தினை போன்று இருக்கும் கரும்புள்ளிகள் கை விரலில் தானாக தோன்றி மறைய கூடிய ஒன்று. பொதுவாக நமது உடலில் சில பகுதிகளில் மச்சம் இருந்தால் அதற்கு நிறைய யோக பலனும் இருக்கிறது, அதே சமயத்தில் தீய பலன்களும் உள்ளன. அந்த வகையில் பெண்களுக்கு விரல்களில் மச்சம் (kaiyil macha palangal in tamil) என்று சொல்லக்கூடிய கரும்புள்ளிகளால் எண்ணற்ற பலன்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம்..! 

newMacha Palangal In Tamil

வலது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

உங்களுடைய நன்னடத்தையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் எப்போதும் சந்தோஷமும், அமைதியும் இருக்கும்.

பெண்கள் உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

உள்ளங்கையில் மச்சம் உள்ள பெண்களுக்கு வாய் பேச்சானது அதிகமாக இருக்கும். இதனால் தெரிந்தவர்கள் கூட பகைவராவார்கள்.

இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

இடது உள்ளங்கைகளில் மச்சம் உள்ள பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது அன்பாகவும், தன்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.

வலது புறங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

பெண்களுக்கு வலது புறங்கையில் மச்சம் இருந்தால் மற்றவர்களிடம் இவர்கள் நட்புடன் பேச ஆசைப்படுவார்கள்.

இடது புறங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

இடது புறங்கையில் பெண்களுக்கு மச்சம் இருந்தால் தங்களுடைய நடத்தையினால் பலருடைய பகையை உருவாக்கி கொள்வார்கள்.

வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

பெண்கள் வலது கை சுண்டு விரல் பகுதியில் மச்சம் இருந்தால் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாதவர்கள் போல் காட்சியளிப்பார்கள்.

வலது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

வலது கை மோதிர விரல் பகுதிகளில் மச்சம் உள்ள பெண்கள் எப்போதும் பிற்காலத்தை நினைத்து எச்சரிக்கையாக செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

newபெண்கள் ருதுவான பலன்

பெண்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

வலது கை ஆள்காட்டி விரல் பகுதியில் மச்சம் உள்ள பெண்கள் மற்றவர்களை எப்போதும் புரிந்துக்கொண்டு செயல்படமாட்டார்கள்.

இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

பெண்களுக்கு இடது கை சுண்டு விரலில் மச்சம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை முறையானது நல்ல வசதி வாய்ப்பாக இருக்கும்.

பெண்கள் இடது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

இடது கை மோதிர விரலில் மச்சம் உள்ள பெண்கள் சாமர்த்தியமாக  இல்லாமல் இருந்தால் பொருளாதாரத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும்.

இடது கை நடு விரலில் பெண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன்:

பெண்களுக்கு இடது கை நடு விரல் பகுதியில் மச்சம் இருந்தால் ஆன்மீக பக்தி அதிகமா இருக்கும்.

இடது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

பெண்கள் இடது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் மற்றவர்களை எந்த நிலையிலும் ஏமாற்றம் செய்யமாட்டார்கள்.

இடது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

பெண்களுக்கு இடது கை கட்டை விரல் பகுதியில் மச்சம் இருந்தால் நேர்மையுடன் இருப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்