Magam Natchathiram
ஆன்மீகத்தை பொறுத்தவரை மொத்தம் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் ஒவ்வொரு நபருக்கும் அவருடைய பிறந்த தேதி மற்றும் நேரத்தினை பொறுத்து தான் ராசி மற்றும் நட்சத்திரம் ஆனது அமையும். நட்சத்திரங்கள் மற்றும் ராசி எப்படி வெவ்வேறு இருக்கிறதோ அதே போல அவர்கள் உடைய குணங்களும் அது மாறி தான் மாறுபட்டு காணப்படுகிறது. ஆனால் அத்தகைய குண அதியங்கள் எல்லாம் நமக்கு அவ்வளவாக தெரிவது இல்லை. அதனால் இன்று 27 நட்சத்திரங்களில் ஒன்றான மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
மகம் நட்சத்திரம் குணங்கள்:
ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களில் பத்தாவது நட்சத்திரம் என்றால் அது மகம் நட்சத்திரம் தான். இந்த மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நம் முன்னோர்கள் மற்றும் ஜோதிடத்தில் ஜெகத்தை ஆள்வார்கள் என்று கூறினாலும் கூட அது எல்லோருக்கும் அமைவது என்பது சாத்தியமான ஒன்றாக உள்ளது.
- சுதந்திரம் மற்றும் தனித்தன்மையினை விரும்புவர்.
- தனி ஒருவனாக யாருடைய உதவியும் இல்லாமல் சாதிக்க வேண்டும் என்றும் சிந்தனை கொண்டவர்.
- அதேபோல அவருடைய செயல்களில் மற்றவர்கள் வந்து விவாதம் மற்றும் ஆலோசனை செய்வதை விரும்பாத குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
- கோபம் நிறைந்த குணம் கொண்டவராக மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருந்தாலும் கூட நம்பியவரை கைவிடாமல் அவருக்கு நேரம் காலம் பார்க்காமல் உதவி செய்யும் மனம் கொண்டவராக இருப்பார்கள்.
- அதுமட்டும் இல்லாமல் மனதில் ஒன்று நினைத்து வெளியில் ஒன்று பேசுபவராகவும் இருக்கலாம் பேச வேண்டும் என்பதை முகத்திற்கு நேராக வெளிப்படையாக பேசும் வல்லமை கொண்டவராகவும் திகழ்வார்கள்.
- மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அறிவு மற்றும் அனுபவம் என்பது மேலோங்கி காணப்படும்.
- யாரிடமும் சண்டை என்பது இல்லாமல் அனுசரித்து வாழும் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
மகம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதல் திருமணத்தை விரும்புவராக இருப்பார்கள். அதேபோல் திருமணமும் விரைவில் நடந்து முடிந்து விடும்.
குடும்பத்தில் நல்ல செல்வம் செழித்து காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்ன தேவை என்பதை முன்பே பூர்த்தி செய்யும் வல்லமை கொண்டவராக இருப்பார்கள்.
ஆனாலும் கூட மனதில் சிறு குழப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் தொழில்:
இத்தகைய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவரிடம் கீழ் படிந்து தொழிலில் இருப்பதை விரும்பாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அதன் மூலம் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள்.
மேலும் கடுமையான பணியினை கூட கடின உழைப்பால் சரியாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா |
அதிர்ஷ்டமான எண், மந்திரம் மற்றும் நிறம்:
மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேலே கூறியுள்ள மந்திரத்தை கூறுவது நல்லது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
அதிர்ஷ்டமான எண்:
5,7,9 ஆகிய எண்கள் ஆனது மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான எண் ஆகும்.
அதிர்ஷ்டமான நிறம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிவப்பு கலந்த நிறம் அல்லது சிவப்பு நிறம் இது தான் உகந்த நிறமாக இருக்கிறது.
வணங்க வேண்டிய தெய்வம்:
இத்தகைய நட்சத்திரத்தில் பிறந்தர்வர்கள் வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர். அதிலும் குறிப்பாக சதுர்த்தி அன்று விநாயகரை வணங்குவது சிறப்பானது.
மகம் நட்சத்திரம் ராசி கல்:
வைரக்கல் தான் மகம் நட்சத்திற்கு ஏற்ற ராசி கல்லாக இருகிறது.
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:
பெண் நட்சத்திரம்:
சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொருத்தமான நட்சத்திரம் சதயம்.
ஆண் நட்சத்திரம்:
அதுவே மகர நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு அவிட்டம் 3-ஆம் பாதம் மற்றும் 4-ஆம் பாதம், சித்திரை நட்சத்திரம் பொருத்தமான நட்சத்திரம் ஆகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |