மகா கும்பமேளா நடைபெறும் தேதி,நேரம் மற்றும் நடைபெறும் இடம் 2025.!

Advertisement

Maha Kumbh Mela 2025 Date and Time in Tamil | மகா கும்பமேளா 2025 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகா கும்பமேளா 2025 எப்போது நடைபெறும் என்பதை கொடுத்துள்ளோம். உலகின் மிகப்பெரிய விழாவாகவும் மில்லியன் கணக்கில் மக்கள் கூடும் விழாவாகவும் கும்பமேளா கருதப்படுகிறது. சன்னியாசிகள், துறவிகள், சாமானிய மக்கள். ஆண்கள், பெண்கள், வேத பண்டிதர்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் விழாவாக இருக்கிறது. கும்பமேளாவில் நான்கு வகைகள் உள்ளது.

ஆர்த் கும்மேளா, பூர்ண கும்பமேளா, மக் கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா என நான்கு கும்பமேளா உள்ளது. ஆனால், இவற்றில் மகா கும்பமேளா தான் மிகப்பெரிய விழா ஆகும். இதுதான் 144 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா இந்த ஆண்டு 2025 நடைபெறவுள்ளது. எனவே, அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

மகா கும்பமேளா 2025 தேதி மற்றும் நேரம்:

Maha Kumbh Mela 2025 Date and Time in Tamil

 மகா கும்பமேளா 2025 ஆம் ஆண்டு, ஜனவரி 13 ஆம் தேதி பவுஷ் பூர்ணிமா ஸ்னானுடன் தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைகிறது.  

நவகிரகங்களில் உள்ள சில குறிப்பிட்ட சுப கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணையும் நாளிலே மகா கும்பமேளா நடைபெறும். கும்பமேளாவின்போது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் அணைத்து பாவங்களும் தீரும். மோட்சம் கிடைக்கும்.

கும்பமேளாவின்போது பல விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். யானைகள், குதுிரைகள், ரதங்கள், மின்னும் வாள்கள்  ஆகியவற்றிக்கு அலங்காரம் பூஜை செய்து ஊர்வலமாக அழைத்து செல்வார்கள்.

புனித நீராடுவதற்கான முக்கிய தேதிகள்:

ஜனவரி 13, 2025 – பௌஷ் பூர்ணிமா ஸ்னான்
ஜனவரி 15, 2025 – மகர சங்கராந்தி ஸ்னான்
ஜனவரி 29, 2025 – மௌனி அமாவாசை ஸ்னான்
பிப்ரவரி 3, 2025 – பசந்த் பஞ்சமி ஸ்னான்
பிப்ரவரி 12, 2025 – மாகி பூர்ணிமா ஸ்னான்
பிப்ரவரி 26, 2025 – மகா சிவராத்திரி ஸ்னான் (முடிவு நாள்)

பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைய உள்ளது.

மகா கும்பமேளா நடக்கும் இடம் 2025 | Maha Kumbh Place in Tamil:

 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மகா கும்பமேளா இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு பிறகு நடத்தப்படும். இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும். 

கும்பமேளா திருவிழா ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் தான் நடத்தப்படும். இருந்தாலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement