மஹா சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

Advertisement

மஹா சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன | Maha Sankatahara Chaturthi in Tamil | Maha Sankatahara Chaturthi History in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மஹா சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன.? என்பதையும் மஹா சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு என்ன என்பதையும் கொடுத்துள்ளோம். மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயக பெருமானுக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் விநாயக பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அணைத்து விதமான சங்கடங்களும் தீரும் .

அத்தனை சிறப்பு மிக்க இந்நாள், இந்த ஆண்டு ஆவணி மாதம் 06 ஆம் தேதி (ஆகஸ்ட் 22) வியாழன்கிழமை அன்று வருகிறது. எனவே, மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயக பெருமானை வழிபடுவதோடு மட்டுமின்றி, மஹா சங்கடஹர சதுர்த்தி பற்றிய விவரங்களையும், அதன் வரலாறையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் Maha Sankatahara Chaturthi in Tamil பற்றி கொடுத்துள்ளோம்.

மஹா சங்கடஹர சதுர்த்தி:

மஹா சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன

மஹா சங்கடஹர சதுர்த்தி என்பது முழுமுதற்கடவுளாக விநாயக பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் ஆகும். விநாயக பெருமானை வழிபடுத்தவர்க்கு உகந்த திதி சதுர்த்தி திதி ஆகும். விநாயக பெருமான் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி திதியில் தான் அவதரித்தார். மாதத்திற்கு இரண்டு முறை வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி திதி வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம்.  எனவே, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திக்கு முன்பு தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மஹாசங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள். பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி.

சங்கட என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள், துன்பங்கள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குதல், அழித்தல் என்று அர்த்தம். எனவே, துன்பங்களை/கஷ்டங்களை அளிக்கும் விரதமே மஹா சங்கடஹர சதுர்த்தி. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட துன்பங்கள் இருந்தாலும் நீங்கும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா

மஹா சங்கடஹர சதுர்த்தி வரலாறு:

ஒருமுறை சந்திரன் கயிலைக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு விநாயக பெருமான் விளையாடி கொண்டிருந்ததை பார்த்தார். விநாயக பெருமான் குதித்து குதித்து விளையாடி கொண்டிருந்தபோது அவரின் தொந்தியும் குதித்து குலுங்கி கொண்டிருந்ததை பார்த்து சந்திரன் சிரித்து விட்டாராம். விநாயகரைப் பார்த்து கேலியாகச் சிரிக்க தொடங்கிவிட்டாராம். அவர் சிரித்ததை கண்டு விநாயகப்பெருமான் கோபம் அடைந்து, உடனே, “நீ தேய்ந்து மறையக்கடவாய் என்று சந்திரனை பார்த்து சபித்துவிட்டார்.

இதனால், சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் செய்து வந்தாராம். சந்திரன் தனது தவறை உணர்ந்து, கடும் தவம் புரிந்ததால் சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் விநாயகப்பெருமான்.

தேய்ப்பிறை என்றாலும், விநாயக பெருமானின் அருளால் சந்திரனின் தேஜஸ் வளர்ந்தது. எனவே, அந்த நன்னாளை தான் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். தேய்பிறை சதுர்த்தி என்பது மாதாமாதம் வருவது. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும், இந்நாளில் விநாயக பெருமானை வழிபாடு செய்து விட்டு, இறுதியாக சந்திர தரிசனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வணங்க கூறும் மந்திரம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement