சிவராத்திரி 4 கால பூஜை நேரம் | Maha Shivaratri 2023 Tamil

Advertisement

Maha Shivaratri 2023 Date And Time in Tamil

சிவபெருமானை மனதில் நினைத்து கொண்டு மகா சிவராத்திரி சிவபெருமானை வணங்கும் பக்தர்கள் நாளைய நாள் முழுவதும் கண் விழித்து மனமுருக வணங்கி வழிபடுவார்கள். சிவராத்திரிக்கு கண் விழித்தால் கிடைக்கும் பலன்களை பற்றியும் அந்த சிவனுக்கு நடக்கும் நான்கு கால பூஜையின் நேரம் மற்றும் அதனை வழிபட்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Maha Shivaratri 2023 Date And Time in Tamil:

இந்த மகா சிவராத்திரி மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும். அந்த வகையில் மகா சிவராத்திரி உலகம் முழுவதும் உள்ள சிவபக்தர்கள் நாளை சிவபெருமானை மிகவும் சிறப்பாக வழிபடுவார்கள். இது உங்களால் முடியவில்லை என்றாலும் அருகில் இருக்கும் சிவபெருமான் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த வழிபாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து அதன் மூலம் சிவபெருமானின் அருளை பெறுங்கள்..!

விரத முறைகள்:

இன்றைய தினம் அனைவருமே விரதத்தை தொடங்கியிருப்பீர்கள். மேலும் இன்று இரவு முழுவதும் கண் விழித்து இருக்கவேண்டும். அதன் பின் 19 தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் உணவுகளை சாப்பிடவேண்டும். அதேபோல் 19 காலை முதல் மாலை 6 மணி வரை தூங்காமல் இருந்து அதன் பின் சிவனின் அருளை பெற்ற பின் தான் தூங்க வேண்டும்.

சிவராத்திரி 4 கால பூஜை நேரம் | Maha Shivaratri 4 Kala Pooja in Tamil:

மகா சிவராத்திரி முதல் கால பூஜை:

 பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இந்த நேரத்தில் சிவபெருமானுக்கு பிரம்மன் வழிபாடு செய்த காலம் ஆகும். 

மகா சிவராத்திரி இரண்டாம் கால பூஜை:

 பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு 9.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை. இந்த நேரத்தில் சிவபெருமானுக்கு பரம்பொருள் விஸ்ணு பூஜை செய்த நேரமாகும். ஆகவே நாமும் இந்த நேரத்தில் விரதம் இருந்து பூஜை செய்தால் நோய் நொடிகள் குணமாகும். சிவன் அருள் பூரணமாக கிடைக்கும். 

மகா சிவராத்திரி மூன்றாம் கால பூஜை:

 பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு 12.00 மணி முதல் இரவு 03.00 மணி வரை. இந்த நேரத்தில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து பூஜை செய்தால் நம்மை எந்த ஒரு தீய சக்தியும் நெருக்காது. 

மகா சிவராத்திரி நான்காவது கால பூஜை:

 பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு 03.00 மணி முதல் இரவு 06.00 மணி வரை. இந்த நேரத்தில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து ரிஷிகளும் மனிதர்களும் பூஜை செய்த நேரமாகும். ஆகவே இந்த நான்கு கால பூஜைகளில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் மூன்றாம் கால பூஜையில் கலந்துகொன்டு வழிபாடு செய்தால் அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். 
தொடர்புடைய பதிவுகள் 👇👇👇
சிவராத்திரி அன்று இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!
மகா சிவராத்திரி அன்று 10 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்குனீர்கள் என்றால் தீராத கடனும் தீர்ந்து விடும்
மஹா சிவராத்திரி அன்று இதை மட்டும் வாங்கி பாருங்கள் அதனையுடைய பலனை உடனே பார்ப்பீர்கள்..!
மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் விரதம் பலன்கள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement