மகா சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம்.!

Advertisement

Maha Shivaratri 2025 Date and Time in Tamil | மகா சிவராத்திரி 2025

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகா சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம் (Maha Shivaratri 2025 Date and Time/ Maha Shivratri 2025 Date in Tamil Nadu) பற்றி கொடுத்துள்ளோம். சிவபெருமானை போற்றி கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் மகா சிவராத்திரி முதன்மையானது. இது இந்துக்கள் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான வழிபாட்டு நாளாகும்.

இந்நாளில் விரதம் இருந்து, கண் விழித்து சிவனை வழிபாடு செய்தல் வாழ்வில் நன்மை உண்டாகும். மகா சிவராத்திரி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இது, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். எனவே, இந்த ஆண்டு 2025 மகா சிவராத்திரி எப்போது வருகிறது. எந்த நேரத்தில் சதுர்த்தி திதி ஆரம்பம் ஆகிறது எப்போது முடிவடைகிறது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மகா சிவராத்திரி அன்று செய்ய கூடியதும், செய்யக்கூடாததும்..!

மகா சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம்:

மகா சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம்

 2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி (மாசி 14 ஆம் தேதி) புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.  பிப்ரவரி 26 அன்று காலை 11.08 AM சதுர்த்தி திதி தொடங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி 08:54 AM மணிக்கு சதுர்த்தி திதி முடிவடைகிறது.  

மேலும் சில முக்கிய வழிபாட்டு நேரங்கள் பின்வருமாறு:

  • நிஷிதா கால பூஜை நேரம் – பிப்ரவரி 27 அன்று காலை 12:08 AM முதல் 12:58 AM வரை
  • சிவராத்திரி பரண நேரம் – பிப்ரவரி 27 அன்று காலை 06:47 AM முதல் 06:47 AM வரை
  • ராத்ரி முதல் பிரஹர் பூஜை நேரம் – பிப்ரவரி 26 அன்று 06:18 PM முதல் 09:25 PM வரை
  • ராத்ரி இரண்டாவது பிரஹர் பூஜை நேரம் – பிப்ரவரி 27 அன்று 09:25 PM முதல் 12:33 AM வரை
  • மூன்றாம் பிரஹர் பூஜை நேரம் – பிப்ரவரி 27 அன்று 12:33 AM முதல் 03:40 AM
  • ராத்திரி நான்காவது பிரஹர் பூஜை நேரம் – பிப்ரவரி 27 அன்று 03:40 AM முதல் 06:47 AM வரை

மகா சிவராத்திரி கொண்டாடுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளது. சிவன் மற்றும் சக்தியின் புராணங்களின்படி, சிவன் பார்வதியை மணந்த நாள் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று, சிவனை நினைத்து சிவனுக்குரிய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு இரவு முழுவதும் கண் விழித்து இருந்தால் நாம் தெரிந்து செய்த பாவங்களும், தெரியாமல் செய்த பாவங்களும் நீங்கும். கோடி பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். மேலும், நம் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் பெருகும்.

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் விரதம் பலன்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement