Maha Shivaratri Kan Mulika Mudiyavillai Endral Enna Seivathu
சிவராத்திரி என்பது சிவனுக்கு உரியதாக இருக்கிறது, சிவன் கோவில்களில் அன்று விசேஷமாக இருக்கும். அதிலும் மாசி மாதத்தில் வருடத்தில் ஒரு நாள் வர கூடிய மகா சிவராத்திரி என்பது முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் கோவில்கள் கலைகட்டும். அதுவும் இரவு நேரம் தான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதாவது மகா சிவராத்திரி அன்று இரவு சிவனுக்கு பூஜைகள் நடக்கும், அன்று இரவு கண் விழித்திருந்து பார்த்தால் புண்ணியம் கிடைக்குமாம், ஆனால் எல்லாராலும் இரவு நேரம் கண் விழிக்க முடியாது. அப்படி உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்.? என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கும். அதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பதிவிற்கு செல்லலாம்.
மகா சிவராத்திரி அன்று ஏன் கண் விழித்திருக்க வேண்டும்:
மகா சிவராத்திரி என்பது சிவனுக்கு உரியதாக இருக்கிறது, இந்நாளில் சிவனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்க்கையில் புண்ணியம் கிடைக்குமாம். அதாவது முன் ஜென்ம பாவம், தெரியாம செய்த பாவம், தெரிந்து செய்த பாவங்கள் போன்றவை நீங்கும்.
மேலும் உங்களின் ஆரோக்கியம் மேம்படும், உங்களிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அழிந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சிவபெருமானை நினைத்து விரதம் இருப்பதால் ஆயுள் அதிகரிக்கும்.
மகா சிவராத்திரி அன்று இரவு சிவலிங்கள் தோன்றுகிறது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அன்றைய இரவு சிவன் கோவிலில் நான்கு கால பூஜை நடக்கும். இதில் பங்கேற்று சிவனை வழிபடுவதால் மேற்கண்ட பலனை அடைய முடியும். மகா சிவராத்திரி அன்று கண் விழிக்கமுடியவில்லை என்றால் என்ன செய்வது:
எல்லாராலும் மகா சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும், அதாவது உடல்நல பிரச்சனை இருக்கும் அவர்களால் இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாது. அதனால் மகா சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் அன்றைய நாள் இரவு ஒரு மணி நேரம் விழித்திருந்து சிவபெருமானின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எத்தனை முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை உச்சரிக்க வேண்டும்.
இரவு முழுவதும் உங்களால் கண் விழிக்க முடியவில்லை என்றால் மூன்றாம் கால பூஜை நேரத்தில் மட்டும் கண் விழித்து சிவபெருமானை வழிபட்டால் போதும் உங்களுக்கு சிவனின் அருளும், நற்பலன்களும் கிடைக்கும். வயதானவர்கள், உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை பின்பற்றலாம். உங்களால் இரவு முழுதும் கண் விழிக்க முடியவில்லை என்றால் மட்மே இதை பின்பற்ற வேண்டும்.
சிவனின் மந்திரத்தை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்க.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |