மகா சிவராத்திரி மந்திரம் | சிவன் காயத்ரி மந்திரம் தமிழ்

Advertisement

மகா சிவராத்திரி மந்திரம்  | சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

சிவராத்திரி என்பது மாதம் மாதம் வர கூடியது, ஆனால் இந்த மாசி மாதத்தில் வர கூடிய மகா சிவராத்திரி ஆனது விஷேசம் பெற்றது. மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானின் சிறந்த இரவு’ என்று பொருள். இந்துக்களின் புராணங்களின்படி மஹா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றுகிறார் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி இரவு தான் மகாசிவராத்திரி ஆகும். மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அப்படி கண் விழித்திருக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

ஓம் நமசிவாய:

ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதனை உச்சரிப்பதால் நமது உடலும், உள்ளமும் தூய்மை அடைகிறது. மேலும் சிவனின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

பாவத்தை நீக்கும் சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

இந்த மந்திரத்தை கூறுவதால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் செய்த பாவங்கள் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.

மகா சிவராத்திரி அன்று சொல்ல கூடிய பாடல்கள்

சிவ காயத்ரி மந்திரம்:

 சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்”

சிவனின் காயத்ரி மந்திரத்தை கூறுவதால் மன அமைதி கிடைக்கும்.

மரண பயம் போக்கும் மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

மரணம் என்றால் மனிதர்கள் பயப்பட கூடிய விஷயமாக இருக்கிறது, ஆனால் நீங்கள் மகா சிவராத்திரி அன்று இந்த மந்திரத்தை கூறுவதால் மரண பயமே இருக்காது.

பாவம் நீக்கும் மந்திரம்:

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா

ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்

விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ

ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

மனிதர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பாவம் செய்திருப்போம். இந்த பாவமானது தெரிந்தும் இருக்கலாம், தெரியாமல் செய்திருக்கலாம். இந்த பாவத்திலிருந்து விடுபட மகா சிவராத்திரி அன்று இந்த மந்திரத்தை கூறுவதால் விடுபடலாம்.

சிவ தியான மந்திரம்:

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்வரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

இந்த மந்திரத்தை கூறுவதால் நீங்கள் இதுவரை செய்த பாவங்களிலிருந்து என்னை விடுவித்து எனக்கு அருள்புரிவாயாக என்பதே இதன் அர்த்தமாக இருக்கிறது. அதனால் உங்களுடைய பாவங்கள் நீங்க வேண்டும் என்றால் இந்த மந்திரத்தை கூறுங்கள்.

மகா மிருத்யுஞ்சய மந்திரம்

 சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

இந்த மந்திரத்தை கூறுவதால் உங்களுக்கு சாவை பற்றிய பயமே இருக்காது. உங்களுக்கு ஏதும் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்கலின் ஆரோக்கியத்திலும் எந்த பிரச்சனையும் இருக்காது.

மகா சிவராத்திரி அன்று செய்ய கூடியதும், செய்யக்கூடாததும்..!

ஏகதச ருத்ர மந்திரம்:

ஓம் ஹம்ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பின்கலாய ஓம் நமஹா

ஓம் ஐம் ஐம் மனோ வந்திஷ்ட சித்தாய ஐம் ஐம் ஓம்

ஓம் ருத்ராய ரோகநமஷாய அகாச சாம் ராம் ஓம் நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சம் சம் ஹ்ரீம் ஸ்ரீம் சங்கரஷனாய ஓம்

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஷபல்யாயை சித்தாய ஓம் நமஹ

ஓம் ஸ்ரீம் பம் செள பாலவர்த்தனாய பாலேஸ்வராய ருத்ராய புட் ஓம்

ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹம் சமஸ்தா க்ரஹ தோஷா வினாஷாய ஓம்

ஓம் கம் ஹ்லெளம் ஸ்ரெளம் க்கெளம் கம் ஓம் நமஹ

ஓம் சும் சண்டிஸ்வராய தேஜஸ்யாய சும் ஓம் புட்

ஓம் பவத் பவாய சம்பவாய இஸ்தா தர்ஷனா ஓம் சம் ஓம் நமஹ

மேல் கூறியுள்ள மந்திரத்தை கூறுவதால் உலகத்தில் உள்ள எல்லா வளங்களையும், செல்வங்களையும் பெற முடியும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement