Shivaratri Nangu Kala Pooja Mantra in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகா சிவராத்திரி அன்று நடைபெரும் நான்கு கால பூஜை நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு 2025 மகா சிவராத்திரி ஆனது, பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஈசனை வழிப்பட்டு சிவபெருமானின் அருளை பெற மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருப்பது மகா சிவராத்திரி.
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி ஆகும். சிவராத்திரியின் போது இரவு நான்கு காலம் பிரிக்கப்பட்டு நான்கு விதமாக பூஜை செய்யப்படுகிறது. பூஜை நேரத்தில் சிவலிங்கத்திற்கு விஷேசமாக அபிஷேகம் செய்யப்படும். அப்போது நாம் நான்கு கால பூஜைக்கும் ஏற்றவாறு மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
சிவராத்திரி நான்கு கால பூஜை மந்திரம் :
முதல் சாம பூஜை மந்திரம்:
முதல் சாம பூஜை இரவு 7:30 மணிக்கு நடைபெறும். இந்த பூஜை ஆனது படைக்கும் கடவுளான “பிரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
மகா சிவராத்திரி முதல் கால பூஜையில் “ஓம் அம்பலத்தாடியே போற்றி ஓம்” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இரண்டாம் சாம பூஜை மந்திரம்:
இரண்டாம் சாம பூஜை என்பது, காக்கும் கடவுளான விஷ்ணு சிவபெருமானுக்கு செய்யும் பூஜை ஆகும். இரண்டாம் கால பூஜை இரவு 10:30 PM மணிக்கு நடைபெறும்.
மகா சிவராத்திரி இரண்டாம் கால பூஜையில் “ஓம் ஈசனே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மூன்றாம் சாம பூஜை மந்திரம்:
மூன்றாம் கால பூஜை என்பது, நள்ளிரவு 12:00 PM மணிக்கு நடைபெறும். இந்த பூஜை ஆனது, சக்தியின் வடிவமாக அம்பாள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜை ஆகும்.
மகா சிவராத்திரி மூன்றாம் கால பூஜையில் “ஓம் கயிலை நாதனே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மகா சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்.?
நான்காம் சாம பூஜை மந்திரம்:
நான்காம்கால பூஜை என்பது, முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் என அனைத்து ஜீவ ராசிகளும் சிவபெருமானுக்கு பூஜை செய்வதாகும். நான்காம் கால பூஜை ஆனது 4:30 PM மணிக்கு நடைபெறும்.
மகா சிவராத்திரி நான்காம் கால பூஜையில் “ஓம் சிவ சிவ போற்றி ஓம்” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
ஈசனின் அருளை பெற வரக்கூடிய இந்த உயர்வான மகா சிவராத்திரியில் விரதம் இருந்து, சிவபெருமானை வழிப்பட்டு அனைத்து விதமான நன்மைகளையும் செல்வங்களையும் மகிழ்ச்சியையும் பெறுவோம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |