மகா சிவராத்திரி சிறப்புகள்

Advertisement

மகா சிவராத்திரி சிறப்புகள்

மாதம் மாதம் சிவராத்திரி என்பது வர கூடியது, ஆனால் இந்த மாசி மாதத்தில் வர கூடிய மகா சிவராத்திரி ஆனது மிகவும் சிறப்பு பெற்றது, இந்த சிவராத்திரி ஆனது சிவனுக்கு உரியது, இந்த நாளில் சிவன் கோவிலில் விஷேசமாக இருக்கும். இந்த நாளில் இரவு முழுவதும் கண் விழித்திருக்கிறார்கள். இந்த நாளில் உள்ள சிறப்புகள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் மகா சிவராத்திரியின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

மகா சிவராத்திரி எப்படி வந்தது:

மகா சிவராத்திரி சிறப்புகள்

மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது தான் மகா சிவராத்திரி, ஒரு நாள் பார்வதி தேவி சிவபெருமானிடம் உங்களை வழிபடுவதற்கு உகந்த நாளை கூறுங்கள் என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் மாசி மாதத்தில் வர கூடிய தேய்பிறை 14-ம் நாளே எனக்கு உகந்த நாள் என்று கூறினார். இந்த நாளில் விரதம் இருந்தால் என்னுடைய அருளை முழுமையாக பெற முடியும் என்று கூறினார்.

மகா சிவராத்திரி அன்று செய்ய கூடியதும், செய்யக்கூடாததும்

சிறப்புகள்:

மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருந்தால் நாம் தெரிந்து செய்த பாவங்களும், தெரியாமல் செய்த பாவங்களும் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் உங்களிடையே வாழ்க்கையில் ஏதும் துன்பங்கள் இருந்தால் அவை நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.

அன்றைய தினம் சிவபெருமானுக்கு விரதம் இருப்பதால் மனதை தூய்மை அடைகிறது. எதிர்மறை எண்ணங்கள் ஒளிந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மேலும் உங்களுடைய ஆயுள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும்.

மேலும் நீங்கள் சிவனுக்காக விரதம் இருந்து அவரை வழிபடுவதால் உங்களின் வாழ்க்கையில் இருந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கும். நீங்கள் மட்டுமில்லை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement