மகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும் | Maha Shivaratri Viratham in Tamil 2026
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும்.? (Maha Shivaratri Viratham in Tamil) யார் இருக்க வேண்டும்.? எப்போது விரதத்தை தொடங்க வேண்டும்.? எப்போது முடிக்க வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். மகா சிவராத்திரி விரதம் இருக்க நினைப்பவர்கள் இந்த பதிவினை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சிவபெருமானுடைய மிக முக்கியமான விரதம் என்றால் அது சிவராத்திரி தான். சிவராத்திரி மாதம் மாதம் வந்தாலும் மகா சிவராத்திரி எப்போதும் சிவபெருமானுக்கு முக்கியமாக வழிபடும் முறை ஆகும். அதேபோல் மகா சிவராத்திரி என்றால் அது மாசி மாதம் வரக்கூடிய மஹா சிவராத்திரிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. 2026 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி (பிப்ரவரி 15 ஆம் தேதி) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்று எவ்வாறு விரதம் இருக்கவேண்டும் என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
மகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும்.? | Maha Shivaratri Viratham Murai in Tamil:

சிவராத்திரி என்பதால் அனைவருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால் எப்போது விரதம் தொடங்கவேண்டும் எப்போது முடிக்கவேண்டும் என்பது தான். இந்த நாளில் அவருடன் 15.02.2026 அன்று கண் விழித்து வழிபாடு செய்துவிட்டு 16.02.2026 ஆம் தேதி விரதத்தை முடித்துக் கொள்ளவும்.
15.02.2026 தேதி இரவு எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு அதன் பின் 16.02.2026 தேதி காலையில் எழுந்து நீராடி விட்டு சிவபெருமானுடைய படத்திற்கு வில்வ மாலை அணிவித்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்துவிட்டு வழிபாட்டை ஆரம்பிக்கலாம்.
நெய் வேத்தியம் என்பது உங்கள் வீட்டில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைக்கலாம் அவ்வளவு தான் வைக்கவேண்டும்.
விரதம் யார் இருக்கவேண்டும்:
- விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவர் அவர் ஆரோக்கியத்தை பொறுத்தது. குழந்தைக்கு 10 வயது தான் ஆகிறது என்றால் கண்டிப்பாக விரதம் இருக்கலாம். ஆதன் பின் இடையில் பால், பழங்கள், இளநீர் கொடுக்கலாம். அதில் ஒரு தவறும் இல்லை.
- முழுவதும் விரதம் இருக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்கள் தண்ணீர் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது ஆகும்.
- பெண்கள் தீட்டு உள்ள நாளாக இருந்தால் அவர்களும் வீட்டிலேயே விரதம் இருக்கலாம். ஆனால் கோவில்களுக்கு செல்லாமல் வீட்டில் பூஜை அறைக்கு செல்லாமல் இருக்கலாம். அதில் ஒரு தவறும் இல்லை.
எவ்வளவு நேரம் விரதம் இருக்கவேண்டும்:
காலையில் விரதம் ஆரம்பிக்கிறோம் என்றால் அன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருக்கவேண்டும். மாலை நேரத்தில் நம்முடைய வழிபாட்டை செய்யவேண்டும். 1 காலம் , 2 காலம், 3 காலம் , 4 காலம் என்று வழிபாடு செய்துவிட்டு மறுநாள் காலையில் உங்களின் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
அதாவது 15.02.2026 அன்று காலையில் விரதம் இருந்துவிட்டு 16.02.2025 தேதி காலையில் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். முழுவதுமாக 24 மணி நேரம் விரதம் இருப்பது தான் சரியானது ஆகும்.
எப்போது விரதம் முடிக்கவேண்டும் என்றால் 16.02.2025 காலையில் இட்லி தோசை எளிமையான உணவை எடுத்துக்கொண்டு தூங்குவது கூடாது. அன்று பகல் முழுவதும் கண் விழித்து மாலையில் சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு தூங்குவது தான் சரியான வழிபாட்டு முறையாகும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 விரதங்களும் பலன்களும்
மகா சிவராத்திரி பலன்கள்:
சிவராத்திரி அன்று நாம் என்ன நினைத்து வழிபாடு செய்தாலும் அது உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும், நோய்கள் நீங்கும். வறுமை நீங்கும், வாழ்க்கையில் நினைத்தது அனைத்தும் நடக்கும். மேலும் கொடிய தோஷங்கள் நீங்கும். அதிலும் இந்த ஆண்டு சனி பிரதோஷத்துடன் சேர்த்தே வருகிறது என்றால் தோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடியது பிரதோஷம் ஆகும். இந்த வருடம் அனைத்தும் சேர்த்து வருவதால் நமக்கு நினைத்தது அனைத்தும் நடக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல் |













