மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? Maha shivaratri vratham in tamil..!

Maha shivratri 2021 date

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? Maha shivaratri vratham in tamil..!

மகா சிவராத்திரி 2021:

  • Thursday, 11 March (11.03.2021)

மஹா சிவராத்திரி (Maha shivaratri vratham in tamil) என்பது இந்துக்களால் கொண்டப்படும் ஒரு சிவ விரதமாகும். இந்த சிவராத்திரி விரதம் வருடம்தோறும் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகின்றது. அந்த வாக்கில் இந்த 2021-ம் ஆண்டு வரும் மார்ச் 11-ம் நாள் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சரி இந்த பதிவில் இறைவனை நினைத்து வழிபடக்கூடிய இந்த சிவராத்திரி விரத நாளில், சிவனை எப்படி வழிபட வேண்டும் மற்றும் மஹா சிவராத்திரி விரதம் (shivaratri vratham in tamil) இருக்கும் முறை பற்றிய விவரங்களை இப்பொழுது நாம் படித்தறிவோம் வாங்க.

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..! Pradosham Mantras in Tamil..!

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..?

shivaratri vratham in tamilவருடம் முழுவதும் எத்தனை சிவராத்திரி வந்தாலும், மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரி விட மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். அந்த நாளில் விரதம் எடுத்து மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் நாம் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம். அத்தகைய மகத்துவமிக்க நாளில் மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

 

சோமவார விரதம் இருக்கும் முறை..! Somavara Vratham Irupathu Eppadi..!

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..?

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? / Maha shivaratri vratham irupathu eppadi step: 1

முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? / Maha shivaratri vratham in tamil step: 2

சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? / Maha shivaratri vratham in tamil step: 3

ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? / Maha shivaratri vratham in tamil step: 4

பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிட வேண்டும். அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் தங்களால் இயன்றவற்றை தந்து வீடு திரும்ப வேண்டும்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? / Maha shivaratri vratham in tamil step: 5

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.

குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?

மஹா சிவராத்திரி அன்று செய்யக் கூடாதவை? (Maha shivaratri vratham rules in tamil)

maha shivaratri vratham rules in tamil: 1

பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

maha shivaratri vratham rules in tamil: 2

சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்