ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 தசாவதாரத்தின் காயத்ரி மந்திரங்கள்

Advertisement

மஹா விஷ்ணுவின் காயத்ரி மந்திரங்கள்

பொதுவாக இந்து சாஸ்திரத்தின்படி கடவுள் விஷ்ணு நமது உலகை காக்கும் கடவுள் ஆவார். அதாவது இவர் தான் நமது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலை செய்கிறார். அதாவது இவர்தான் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதனால் இந்த விஷ்ணு பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் நாம் பெறுவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால் நாம் முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். மகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை போதித்தார். அத்தகைய விஷ்ணு மந்திரங்கள், போற்றிகள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார காயத்ரி மந்திரங்களை இன்றைய பதிவில் பார்க்கலாம். இந்த மந்திரங்களை முழுதாக படித்து விஷ்ணு பகவானின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று பயன்பெறுங்கள்.

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார காயத்ரி மந்திரங்கள்:

1. ஸ்ரீ மத்ஸ்ய அவதார காயத்ரி மந்திரம்

ஓம் சமுத்ர ராஜாய வித்மஹே!
கட்க ஹஸ்தாய தீமஹீ!
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்!

2. ஸ்ரீ கூர்ம அவதார காயத்ரி மந்திரம்

ஓம் தராதராய வித்மஹே!
பாசஹஸ்தாய தீமஹி!
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்!

3. ஸ்ரீ வராஹ அவதார காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே!
பூமிபாலாய தீமஹி!
தன்னோ வராஹ ப்ரசோதயாத்!

4. ஸ்ரீ நரசிம்மர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் வஜ்ர நகாய வித்மஹே !
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி !
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !

5. ஸ்ரீ வாமன அவதார காயத்ரி மந்திரம்

ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே!
சூக்ஷ்மதேஹாய தீமஹி!
தன்னோ வாமன ப்ரசோதயாத்!

Maha vishnu gayatri mantra in tamil:

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார காயத்ரி மந்திரங்கள்

6. ஸ்ரீ பரசுராமர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் அக்னிசுதாய வித்மஹே!
வித்யாதேஹாய தீமஹி!
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்!

7. ஸ்ரீ ராமர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் தர்ம ரூபாய வித்மஹே !
சத்ய விரதாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !

ஓம் தாசரதாய வித்மஹே !
சீதா வல்லபாயா தீமஹி !
தன்னோ ராம ப்ரசோதயாத் !

8. ஸ்ரீ பலராமர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் ஹலாயுதாய வித்மஹே!
மஹாபலாய தீமஹி!
தன்னோ பலராம ப்ரசோதயாத்!

9. ஸ்ரீ கிருஷ்ணா அவதார காயத்ரி மந்திரம்

ஓம் தாமோதரய வித்மஹே !
ருக்மணி வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !

ஓம் கோவிந்தாய வித்மஹே !
கோபி-ஜன வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !

10. ஸ்ரீ கல்கி அவதார காயத்ரி மந்திரம்

ஓம் பரமபுருஷாய வித்மஹே!
பாபஹராய தீமஹி!
தன்னோ கல்கி ப்ரசோதயாத்!

விநாயகரின் கீர்த்தியை கூறும் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் வரிகள்.

முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement