மஹாலக்ஷ்மி ஸ்லோகம் | Mahalakshmi Slogam in Tamil..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மஹாலக்ஷ்மி தாயாரின் ஸ்லோகத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது மாலை நேரங்களில் நமது வீட்டில் விளக்கேற்றி, சூடம் மற்றும் சாம்பிராணி போட்டு பூஜை செய்வது வழக்கமான ஒன்று. ஏனென்றால் இவ்வாறு நாம் பூஜை செய்வதனால் மஹாலக்ஷ்மி அம்மையாரின் வருகை நமது வீட்டிற்கு கிடைத்து வீட்டில் செல்வா செழிப்பு ஏற்படும் என்பது ஒரு ஐதீகமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று மஹாலக்ஷ்மி தேவையின் ஸ்லோகம் வரிகளை பார்க்கலாம் வாங்க..!
மகாலட்சுமி ஸ்லோகம்:
நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம
த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ
பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா
ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி
ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி
ரமா ரக்ஷ்கரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா
மேலே சொல்லப்பட்டுள்ள மஹாலக்ஷ்மி தேவையின் ஸ்லோகத்தை கூறிக்கொண்டு நாம் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு என இதுபோன்ற தினங்களில் பூஜை செய்யும் போது வேறு ஏதேனும் ஒரு பிரசாதத்தையும் செய்து வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு என்பது உண்டாகும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
அதேபோல் இத்தகைய மஹாலக்ஷ்மி தேவி விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி என இவற்றை எல்லாம் சேர்த்து மொத்தமாக 8 நிலைகளில் நமக்கு அருள் புரிந்து வருகிறாள்.
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |