குறைவற்றை செல்வத்திற்கு வீட்டின் சமயலறையில் இந்த பொருட்களை வைத்திடுங்கள்.!

Advertisement

 மகாலட்சுமி வீட்டில் தங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! நீங்கள் மாதம் மாதம் வாங்கும் சம்பளம் இருந்த இடம் தெரியாமல் போகிறதா.! அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா.? முதலில் உங்கள் வீட்டில் மஹாலட்சுமி குடியிருக்க வேண்டும். அப்போது தான் பணம் பெருகி கொண்டே இருக்கும். அதற்கு சமயலறையில் சில பொருட்களை குறையாமல் இருந்தால் மஹாலட்சுமி வீட்டில் குடியிருப்பாள்.

வீட்டில் மஹாலட்சுமி பூஜை அறைக்கு பிறகு சமயலறையில் தான் குடியிருப்பாள். அப்பேர்ப்பட்ட  சமயலறையில் சில பொருட்களை குறை இல்லாமல் வைத்திருக்க வேண்டுமாம். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இந்த பதிவை படிப்பதோடு நிறுத்திவிடாமல் செயல்படுத்தி பயனடையுங்கள் நண்பர்களே..!

இதையும் படியுங்கள் ⇒ சமயலறையில் இந்த பொருட்கள் இருந்தால் கஷ்டம் மேல் கஷ்டம் ஏற்படும்..

உப்பு ஜாடி:

உப்பு ஜாடி

உப்பு வைக்கும் பாத்திரம் மகாலட்சுமியின் உருவமாக பார்க்கப்படுகிறது. அதனால் உப்பு வைக்கும் பாத்திரத்தில் உப்பு குறையவே கூடாது. அந்த பாத்திரம் முழுவதும் உப்பு இருக்க வேண்டும். அதே போல் உப்பு கடைசியாக இருக்கும் உப்பு வரை பயன்படுத்தி சுத்தமாக தீர்ந்த பிறகு உப்பு வாங்க கூடாது. உப்பு குறைவாக இருந்தாலே வாங்கி கொள்ளுங்கள்.

சமைலறையில் ஊறுகாய்:

குறைவற்ற செல்வம்

ஊறுகாய் குபேரனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதனால் சமைலறையில் ஊறுகாயை கட்டாயமாக வையுங்கள். நீங்கள் ஊறுகாய் சாப்பிடமாட்டீர்கள் என்றாலும் சிறிதளவு ஊறுகாய் சமைலறையில் வைத்திடுங்கள்.

மஞ்சள்:

mahalakshmi veetil thanga

வீட்டில் மஞ்சளை நிறைவாக சமையலறையில் வைத்திடுங்கள். அது மஞ்சள் வைக்கும் பாத்திரம் மற்றும் மஞ்சள் தூள் வைக்கும் பாத்திரம் இரண்டிலும் முழுவதுமாக நிரப்பி வைக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களையுமே கடைசியாக தீரும் வரை பயன்படுத்தி அதன் பிறகு வாங்கி வைக்க கூடாது. குறைவாக இருக்கும் போதே வாங்கி வைத்திடுங்கள்.

தண்ணீர் குடம்:

தண்ணீர் குடம்

சமையலறையில் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். அது குடமாக இருந்தாலும் சரி, பானையாக இருந்தாலும் சரி தண்ணீர் முழுவதும் இருக்க வேண்டும்.

அன்னபூரணி படம்:

அன்னபூரணி படம்

அன்னத்தை வழங்க கூடிய அன்னபூரணியின் படத்தை சமையலறையில் மாட்டி வையுங்கள். பூஜை அறையில் அன்னபூரணியின் படம் இருந்தாலும் சமையலறையிலும் ஒன்று வையுங்கள். இப்படி வைப்பதினால் உணவுக்கு பஞ்சம் இல்லாமல் வயிறாற  சாப்பிடலாம்.

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் இதுவரைக்கும் உங்கள் வீட்டு சமையலறையில்  இல்லையென்றாலும் இந்த பதிவை படித்த பிறகாவது சமயலறையில் கண்டிப்பாக வைத்திடுங்கள். இது போல் வைப்பதினால் குறைவில்லாத செல்வமும், குறைவில்லாத வாழ்கையையும் வாழலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement