Mahalaxmi Rajyogam in Gemini 2025
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மஹாலக்ஷ்மி ராஜயோகத்தினால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் பற்றி மஹாலக்ஷ்மி என்பவள் செல்வத்தையும், வளத்தையும், அதிர்ஷ்டத்தையும் தருபவள். எனவே, மஹாலக்ஷ்மி யோகம் ஒருவருக்கு செல்வம், வசதி, மற்றும் அதிர்ஷ்டத்தை அளிக்கும். சுக்கிரன் ஆட்சி, உச்சம் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருந்தால் லட்சுமி யோகம் ஏற்படும். அதேபோல், லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதியும், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் லட்சுமி யோகம் ஏற்படும்.
அதேபோல் ஒரு கிரகதத்துடன் மற்றொரு ஒரு குறிப்பிட்ட கிரகம் சேரும்போது மஹாலக்ஷ்மி யோகம் உருவாகும். தற்போது, மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் பகவானுடன் சந்திரன் சேர்வதால் மஹாலக்ஷ்மி உருவாகிறது. இதன் விளைவு 12 ராசிகளில் இருந்தாலும், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மட்டும் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அப்படி மஹாலக்ஷ்மி ராஜயோகத்தினால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 3 ராசிகள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
மஹாலக்ஷ்மி ராஜயோகத்தினால் செல்வதை பெரும் ராசிகள்:

மிதுன ராசியில் ஏற்கனவே சஞ்சரித்து வரும் செவ்வாய் கிரகத்துடன் சந்திரன் இணைவதால் மஹாலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் 12 ராசிகளில் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டமான பலன்களை அளிக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு மிதுன ராசியில் உருவாகும் மஹாலக்ஷ்மி ராஜயோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பான தருணங்களை பகிர்ந்துக்கொள்ளும் வாய்ப்புக்கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் பணவரவு அதிகரிக்கும்.

கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்களுக்கு மஹாலக்ஷ்மி ராஜயோகம் மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். இதுவரை இருந்துவந்த உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கோவில் வேண்டுதல் நிறைவேறும். கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

கன்னி ராசி:
மிதுன ராசியில் உருவாகும் மஹாலக்ஷ்மி ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு லாபத்தை ஏற்படுத்தி தரும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபரம் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தை பெறுவார்கள். அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கதொகை அல்லது சலுகை போன்றவை பெறுவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர் பணவரவும், பழைய சொத்துக்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












