Mahalaya Paksha Vegetables in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகாளய பட்ச காலத்தில் என்னென்ன காய்கறிகளை சேர்க்க வேண்டும்.? என்னென்ன காய்கறிகளை சேர்க்க கூடாது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆன்மீகத்தில் மகாளய பட்ச காலத்தில் ஒரு சில விசயங்களை செய்யக்கூடாது என்றும், ஒரு சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முக்கியமாக, மகாளய பட்சம் விரதம் இருப்பவர்கள் இதுபோன்ற விஷயங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப மகாளய பட்சத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். மகாளய பட்ச காலம் என்பது, இறந்த நம் முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வந்து நம்முடன் இருக்கும் காலம் ஆகும். மொத்தம் 15 நாட்கள் மகாளய பட்சம் காலம் ஆகும். இந்த 15 நாட்களும் நம் முன்னோர்களை வழிபட வேண்டும். அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு பிடிக்காத காரியங்களை செய்ய கூடாது என்றும் கூறப்படுகிறது. அதேபோல், மகாளய பட்ச காலத்தில் நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளில் ஒரு சில காய்கறிகளை தவிர்க்க வேண்டும் என்றும், ஒரு சில காய்கறிகளை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.
மகாளய பட்சம் என்றால் என்ன.? மகாளய பட்சம் 2024 எப்போது தொடங்குகிறது.?
மகாளய பட்சத்தில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்:
- வாழைக்காய்
- வாழைத்தண்டு
- வாழைப்பூ
- பயத்தங்காய்
- புடலங்காய்
- அவரைக்காய்
- சக்கரவள்ளி கிழங்கு
- சேனைக்கிழங்கு
- சேப்பங்கிழங்கு
- பாகற்காய்
- இஞ்சி
- மாங்காய்
- நெல்லிக்காய்
- பிரண்டை
- மிளகு
- கறிவேப்பிலை
- பாசிப்பருப்பு
- உளுந்து
- கோதுமை
- வெல்லம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் மகாளய பட்ச காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதேபோல், மகாளய பட்ச காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகளும் உள்ளது. அவை பின்வருமாறு:
மகாளய பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
மகாளய பட்சத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்:
- பச்சை மிளகாய்
- மஞ்சள் பூசணி
- வெள்ளை பூசணி
- கோவக்காய்
- முருங்கைக்காய்
- பீட்ரூட்
- ப்ரோக்கோலி
- பட்டாணி
- வெங்காயம்
- பூண்டு
- பெருங்காயம்
- தக்காளி
- கத்தரிக்காய்
- செள செள
- சுரைக்காய்
- முட்டைகோஸ்
- நோக்கல்
- முள்ளங்கி
- பீன்ஸ்
- கீரை
- உருளைக்கிழங்கு
- கேரட்
மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் மகாளய பட்ச காலத்தில் தவிர்ப்பது நல்லது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |