மகாளய பட்சம் என்றால் என்ன.? | Mahalaya Patcham Endral Enna in Tamil | மகாளய பட்சம் வரலாறு
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகாளய பட்சம் என்றால் என்ன.? என்பதையும் மகாளய பட்சம் 2024 எப்போது ஆரம்பம் ஆகிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். மகாளய பட்சம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மகாளய பட்சம் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு மகாளய பட்சம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
மகாளய பட்சம் என்பது பித்ருக்களின் அருளை பெறுவதற்குரிய மிக முக்கியமான காலத்தையே மகாளய பட்சம் என்று கூறுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாளய பட்சம் எப்போது வருகிறது.? என்பதையும் மகாளய பட்சம் என்றால் என்ன.? என்பதையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்ன தெரியுமா.?
Mahalaya Patcham 2024 in Tamil:
மகாளய பட்சம் காலம் என்பது, ஆவணி மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சத்தின் நிறைவாக வருவதையே மகாய அமாவாசை என்று கூறுகிறார்கள். பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் அமாவாசைகளில் மகாளய அமாவாசையும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
மகாளய பட்சம் பொதுவாக ஆவணி புரட்டாசி மாதங்களில் வரும். மகாளய பட்சத்தின் 15 நாட்களும் இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது என முன்னோர்களை வணங்குவதற்கு உரிய காலம் ஆகும்.
இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 18 ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்குகிறது. மகாளய பட்சத்தின் நிறைவு நாளான மகாளய அமாவாசை அக்டோபர் 02 ஆம் தேதி வருகிறது. அதாவது, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 02 ஆம் தேதி வரையிலான காலம் மகாளய பட்சம் ஆகும்.
எனவே, மகாளய பட்ச காலத்தில் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். புண்ணிய தளங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.
மகாளய பட்சம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?
மகாளய பட்சம் காலம் என்பது, ஆவணி மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் மகாளய பட்சம் ஆகும். மகாளய என்றால் கூட்டாக வருதல் என்று பொருள்படும். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் ஒருசேர கூடும் காலமே மகாளய பட்சம் என்று கூறப்படுகிறது. பட்சம் என்றால் 15 நாட்கள் என்று பொருள்படும். எனவே, மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் ஓன்று கூடி 15 நாட்கள் நம்முடன் இருக்கும் காலமே மகாளய பட்சம். மகாளய பட்சம் என்பது மகாபாரத்தத்துடன் தொடர்புடைய ஒன்றாகும். அதாவது, மகாளய பட்சம் உருவான கதை என்றே கூறலாம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.மகாபாரதத்தில் கர்ணன் இறந்த பிறகு, கர்ணன் நரகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உண்ண உணவாக தங்கம், நகைகள் போன்ற பொருட்களை கொடுத்தார்கள். அதற்கு, கர்ணன் தங்க நகைக்களை எப்படி சாப்பிட முடியும் என்று எம தர்ம ராஜாவிடம் கேட்டார்.
அதற்கு எமதர்ம ராஜா, நீ பூமியில் வாழும் காலத்தில் கேட்டவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய பெரிய கொடை வள்ளலாக இருந்தாலும், வாழும் கடைசி நாள் வரை உன்னுடைய முன்னோர்களை நினைத்து பிண்ட தர்ப்பணம் கொடுத்து அவர்களை வழிபட வில்லை. இதனால் உன் முன்னோர்கள் திருப்தி அடைவதில்லை. எனவே, நீ பூமியில் வாழும்போது பெரும் புண்ணியங்களை செய்தாலும் உனக்கு சொர்க்கத்தில் இடம் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல், கர்ணணுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தார். பூமிக்கு வந்த பிறகு, கர்ணன் அவனுடைய முன்னோர்களை அறிந்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தான். அதன் பிறகே, கர்ணனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது. எனவே, கர்ணன் பூமிக்கு வந்து முன்னோர்களை வழிபாடு செய்த 15 நாட்களும் மகாளய பட்சம் என்று கூறப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |