மங்கள ரூபிணி பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்..

Advertisement

மங்கல ரூபிணி பாடல் வரிகள்

பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடவுளை வணங்குவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் விளக்கேற்றி, சாம்பிராணி, சூடம் போன்றவற்றை காண்பித்து கடவுளை வணங்குவீர்கள். சிலரது வீட்டில் பக்தி பாடல்கள் காலை பொழுதிலும், மாலை நேரத்திலும் ஒலித்து கொண்டே இருக்கும். இவ்வாறு சொல்லும் போது கடவுள் நமது வீட்டில் வாசம் செய்வாள் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் தான் இந்த பதிவில் மங்கள ரூபிணி பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

மங்கல ரூபிணி பாடல் வரிகள்:;

மங்கள ரூபிணி மதியொளி சூலினி
மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும்
சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே

வரலட்சுமி விரத ஸ்லோகம்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி
தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

சிவபுராணம் பாடல் வரிகள்

தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட
தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட
கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட
பண்மணி நீ வருவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த
நல் சக்தி எனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

எண்ணியபடி நீ அருளிட வருவாய்
எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி
கவலைகள் தீர்ப்பவளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

இடர் தருதொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி

மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement