மாங்கல்ய தோஷம் நீங்க பரிஹராம்..

Advertisement

மாங்கல்ய தோஷம்

தோஷங்கள் நாம் வாழ்க்கையில் நமக்கு பல இன்னல்களை தேடித்தருகிறது. தோஷங்களில் களத்திர தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம் என பல தோஷங்கள் இருக்கின்றன. இந்த தோஷங்கள் தீர பல பரிகாரங்கள் உள்ளன. வீட்டில் கல்யாண வயதில் ஒரு பெண் அல்லது ஆண் இருந்தால் அவர்களுக்கு முதலில் கல்யாண யோகம் உள்ளதா? ஏதேனும் தோஷங்கள் உள்ளதா என்பதை பார்ப்பார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடியது மாங்கல்ய தோஷம் தான். இன்றைய பதிவில் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டால் என்ன மாதிரியான பரிஹாரம் எப்போது செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

மாங்கல்ய தோஷம் பரிகாரம்:

மாங்கல்ய தோஷம் நீங்க பரிஹராம்

பரிகாரங்கள் நமது தோஷங்களை நிவர்த்தி செய்ய கடைபிடிக்க படுகிறது. ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. திருமணம் என்றால் முதலில் பார்ப்பது ஜாதகம் தான்.

அந்த ஜாதகத்தில் தான் ஒருவருக்கு உள்ள தோஷங்கள் கண்டறிய படுகிறது.

தோஷங்கள் ஏற்பட காரணம் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்பு, கிரகங்கள் சேர்க்கை.

இந்த கிரக அமைப்பால் ஒருவரின் திருமணம் தடைபடலாம். இந்த தோஷங்களை மாங்கல்ய தோஷம் என்கிறோம்.

மாங்கல்ய தோஷம் பரிகாரம் செய்முறை:

மாங்கல்ய தோஷம் நீங்க

மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் அஷ்டமி நவமி அற்ற வெள்ளிகிழமையில் ம்நாம் முன்னோர்களில் திருமணமாகாத கன்னியர்களை வேண்டி வீட்டில் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.

அவ்வாறு செய்யும் பூஜைகளில் பங்குபெறும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துணி, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம் ஆகியவற்றை தானமாக வழங்கி அறுசுவை உணவு வழங்கி வாழ்த்து பெற வேண்டும்.

வீட்டில் எப்போதும் குறையாத அளவு பணமிருக்க அரிசி மட்டும் போதும்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement