Mango Tree Vastu in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் மரங்கள் என்பது இருக்கும். நாமும் ஏதாவது ஒரு மரத்தை கண்டிப்பாக வளர்ப்போம். இந்த காலகட்டம் எவ்வளவு தான் நவீன காலமாக மாறினாலும், ஆன்மிகம் என்பது மாறாத ஒன்றாக உள்ளது. சிலர் ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்வார்கள். ஆனால் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள் எதை செய்தாலும் ஆன்மீக ரீதியில் தான் செய்வார்கள். அதாவது எந்த ஒரு செயல் செய்தலும் நல்ல நேரம் காலம் பார்த்து தான் செய்வார்கள். அதிலும் சிலர் ஒரு சின்ன மரம் நடுவதாக இருந்தாலும் வாஸ்து பார்த்து தான் நடுவார்கள். அப்படி இருக்கையில் நம் அனைவரின் வீடுகளிலும் அதிகளவு இருக்கும் மரம் என்றால் அது மாமரம் தான். அந்த மாமரம் எந்த திசையில் இருக்க வேண்டும். எந்த திசையில் இருக்க கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
கடன் தீர்ந்து வீட்டின் பணவரவு அதிகரிக்க 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும் |
மாமரம் எந்த திசையில் இருக்க வேண்டும்:
பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் மாமரம் இருக்கிறது. ஆனால் நாம் இந்த திசையில் தான் இருக்க வேண்டும் என்று வாஸ்து பார்த்து வைத்திருக்க மாட்டோம். அந்த காலங்களில் மாவிலைகளை வீட்டு வாசல்களில் கட்டி விடுவார்கள். காரணம் தீயசக்திகளும், துஷ்ட சக்திகளும் வராமல் இருக்கும். கஷ்டங்கள் மறைந்து மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைத்து சகல செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் மாமரம் இந்த திசையில் இருந்தால் அதனால் வறுமையும் கஷ்டங்களும் வந்து சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அது எந்த திசை என்று பார்க்கலாம் வாங்க..!
நாம் காலையில் எழுந்து வெளியில் செல்லும் போது மாமரத்தை பார்க்கும் இடத்தில் வளர்க்க கூடாது. அதாவது காலையில் எழுந்ததும் மாமரத்தை பார்க்க கூடாது என்று சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி மாமரம் நம் வீட்டின் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ அமைந்திருக்க வேண்டும்.
ஒரு வேளை நாம் தூங்கி எழுந்ததும் மாமரத்தை பார்த்தால், அதனால் நமக்கு பல கஷ்டங்கள் வந்து சேரும். கடன் சுமை அதிகமாகி, பணவரவு குறைய ஆரம்பிக்கும். அதனால் மாமரத்தை தூங்கி எழுந்ததும் பார்க்க வேண்டாம்.
பணவரவை அதிகரிக்க பச்சை கற்பூரம் மட்டும் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |