வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உலகில் மன்னிக்க முடியாத பாவம் எது தெரியுமா?

Updated On: September 27, 2025 1:27 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

Mannipu Kidaikatha Paavam /மன்னிக்க முடியாத பாவம்

இன்றைய பதிவில் நம் வாழ்வில் மன்னிக்க முடியாத பாவம் எது என்பதை பற்றி பார்க்க போகிறோம். நம் வாழ்க்கையில் செய்யும் சில பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்காது. நாம் வீட்டில் ஏதாவது தவறு செய்து விட்டால் அல்லது பாவம் செய்து விட்டால் இந்த பாவம் அனைத்தும் யாரை சேரப்போகிறதோ என்று சொல்ல கேட்டிருப்போம். சில மதங்களின் படி கர்ம வினைகளின் படி மன்னிக்க முடியாத பாவம் உள்ளது. நீங்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப உங்களுக்கு கஷ்டங்கள் வந்து சேரும்.ஒருவர் செய்த சில பாவங்களை ,மன்னிப்பு கிடைக்காத வாய்ப்பை இழந்து விடுவது மன்னிக்க முடியாத பாவமாக கருதப்படுகிறது. இன்றைய பதிவில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…..

மன்னிப்பே கிடைக்காத முக்கிய 6 பாவங்கள்:

நாம் பிறரின் சொத்துக்கள் மீதும் பணத்தின் மீதும் ஆசைப்பட்டு அதை அபகரிக்க முயற்சி செய்தல் கூடாது.

நம்முடையை சுயலநலத்திற்காக பிறரின் கனவுகள் ஆசைகளை நாம் அழித்து அவர்களின் மீது தேவையில்லாத பொய்கள் மற்றும் பழிகளை சுமத்த கூடாது.

நாம் தீய வழியில் செல்வதும், பிறருக்கு மனதால் கூட நன்மை நினைக்காமல் இருப்பதும். அவர்களுக்கு பெரிய பாவத்தை உண்டாக்க கூடும்.

எந்த சூழ்நிலையிலும் கர்ப்பிணி பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ள கூடாது.அதே போல் மாதவிடாய் காலங்களில் பெண்களை மனம் நோகும்படி பேசுதல் கூடாது.

எந்த சூழ்நிலையிலும் நாம் தப்பித்துக்கொள்ள இன்னொருவர் மீது தேவை இல்லாத பொய், பழிகளை சொல்லி அவர்களை சீர்குலைய செய்யக் கூடாது.

ஒரு பொழுதும் பிறரின் மனைவி மற்றும் கணவன் மீது ஆசையும் காதலும் கொள்ளக்கூடாது.

 பெத்த  மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று கூறுவார்கள். ஒரு காலத்திலும் பெற்றோர்களை கைவிடக்கூடாது. பெற்றோர்களின் மனதை காயப்படுத்துவது மன்னிக்க முடியாத பாவம் ஆகும்.

பெற்றோர் செய்த பாவம் பிள்ளையே சேருமா..? இல்லையென்றால் யாரை சேரும் உண்மை என்ன தெரியுமா..?

இஸ்லாமிய மதத்தில் மன்னிக்க முடியாத பாவம்:

ஷர்குள் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கம் வழிபாடு ஆகும். இந்த வழிபாட்டை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்கள் செய்வதும் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் மற்றும் பண்புகளை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் மன்னிக்க முடியாத பாவம் ஆகும்.

கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கும் திசையில் மறைந்தபிறகு ஒருவர் அவர் செய்யும் பாவங்களில் இருந்தும் தவறுகளில் இருந்தும் மன்னிப்பு கேட்டால்  அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

கிருஸ்துவ மதத்தில் மன்னிக்க முடியாத பாவம்:

மத்தேயு 12:31-32 உள்ள தொந்தரவான பகுதியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.இது கடவுளின் கிருபையால் மறைக்கப்படாத மன்னிக்க முடியாத பாவமாக இருக்கிறது.

பைபிளின் படி இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு நம்பாதவர்களுக்கு மன்னிக்க முடியாத பாவமாக கருதப்படுகிறது.

பரிசுத்த ஆவியை பற்றி தவறாக பேசுவது மன்னிக்க முடியாத பாவமாக கருதப்படுகிறது.

இந்து மதத்தில் மன்னிக்க முடியாத பாவம்:

கர்ம விதிகளின் படி சில பாவங்களுக்கு எந்த பரிகாரமும் இல்லை . மேலும் செய்த பாவங்களுக்கு விளைவுகளை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதன் எந்த உயிரையும் கொள்ள கூடாது என்பதுதான் இறை நியதி ஆகும். இறைவனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் மனிதன் கொள்ள கூடாது என்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதி ஆகும் . இந்த விதியை மீறி ஒருவன் தவறு செய்தால் அவருக்கு மன்னிப்பு கிடையாது.  

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now