வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்..! | Manjalile Neeradi Song Lyrics in Tamil

Updated On: December 28, 2024 1:16 PM
Follow Us:
Manjalile Neeradi Song Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Manjalile Neeradi Song Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக நாம் அனைவருக்குமே பிடித்த கடவுள் என்று ஒன்று இருக்கும். அக்கடவுளை நினைத்து வழிபட்டால் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை. முக்கியமாக, நமக்கு பிடித்த கடவுளை நினைத்து வழிபடும்போதும் நம் மனது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனவே, அந்த வகையில் நம் அனைவர்க்கும் பிடித்த கடவுளான அம்மனை போற்றி பாடக்கூடிய பாடல் ஒன்றினை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். அதாவது, மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல்:

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல்

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்
மஞ்சளிலே நீராடி
குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா
அம்மா நீ மருளாடி வந்திடம்மா

உடுக்கை பம்பை முரசொலிக்க
உருமி மேளம் தான் ஒலிக்க
சித்தாங்கு ஆடை கட்டி
தாயே நீ சீறி எழுந்திடம்மா

மேல் மலையனூரில் கோயில் கொண்ட
என் அங்காள ஈஸ்வரியே
ஆத்தாளே அழைக்கின்றேன்
ஆடி இங்கு வந்திடம்மா
நீ வந்திடம்மா…

மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே

குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே

குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே

சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
தேரோடும் வீதியிலே
தாயே நீயாடி வந்திடம்மா

அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
ஆடி வரும் தேரினிலே
நீ அழகாக வருபளே அம்மம்மா

மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அமம்மா

மலையனூரு அங்காளியே
மாங்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே

ஆலய வாசலிலே
அலங்காரத் தோரணமாம்
அங்காள ஈஸ்வரிக்கு
அபிஷேக பூஜைகளாம்

ஆடிவரும் தேரினிலே
அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா
ஆயிரம் கண்கள் கொண்டவளே
எங்க அங்காள ஈஸ்வரியே

திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
மாவிளக்கின் ஒளியினிலே
தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா

மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா

மலையனூரு அங்காளியே
நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வாடியம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா

மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா

மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே

நம்மை காக்கும் காமாட்சி அம்மனின் விருத்தம் வரிகள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now