மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்..!

Advertisement

Mantra Raja Pada Stotram in Tamil | மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ராஜ பத ஸ்தோத்திரம் ஆனது, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை போற்றி ஈஸ்வரர் பாடியதாக கூறப்படுகிறது. இம்மந்திரத்தை காலையில் மூன்று முறையும் இரவில் மூன்று முறையும் படிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து கிழக்கு திசையை நோக்கியவாறு மூன்று முறை படிக்கச் வேண்டும். அதேபோல், இரவு தூங்குவதற்கு முன்பாக மூன்று படிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் கடன், நோய், வழக்கு என எந்தவொரு கடன் பிரச்சனையும் எளிதில் தீரும். இம்மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தீராத கடன் பிரச்சனையும் தீரும். உடல் ஆரோக்கியம் மேம்ப்படும். எனவே, இத்தகைய அத்தனை சிறப்பு வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து தினந்தோறும் படிக்கும் வகையில் இப்பதிவில் மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் pdf பற்றி கொடுத்துள்ளோம்.

Mantra Raja Pada Stotram Lyrics in Tamil:

ஸ்ரீ ஈஸ்வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசா’லாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச்’வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம்
நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்

பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திச’ம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜா’நாதி நமாம்யாத்யம் தம்ஹம் ஸர்வதோமுகம்

நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந:
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:
ரோகாத்யாஸ்ச ப்ரணச்’யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்

ஸர்வோபியம் ஸமார்ச்’ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே
ச்ரியா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ச’த்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாச’யேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்
த்யக்தது: கோகிலாந் காமாந் அச்’நந்தம் தம் நமாம்யஹம்

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்

ச’ங்கரேண ஆதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய:படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் pdf

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement