கோபத்தை குறைக்கும் மந்திரம்..!

Advertisement

Mantra to Reduce Anger in Tamil | கோபம் குறைய மந்திரம்

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கோபத்தை குறைக்கும் மந்திரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக, கோபம் என்பது இயல்பான ஒன்று. மனிதனுக்கு உண்டாகும் உணர்ச்சிகளில் கோபமும் ஒன்று. ஒரு விதமான உணர்ச்சியை வெளிப்படுத்துவது தான் கோபம். ஆனால், கோபம் எல்லா நேரங்களிலும், அதிகமாக வருதல் கூடாது. அப்படி வந்தால் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

எவர் ஒருவருக்கு கோபம் அதிகமாக வருகிறதோ அவர் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்காது. அதனால்,அதிக கோபப்படும் நபர்கள், கோபத்தை தணிப்பதற்கு பல வழிகளை மேற்கொள்வார்கள். அதாவது, பாடல் கேட்பது, டிவி பார்ப்பது மற்றும் யோகா செய்வது என இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதனை, தவிர்த்து கோபம் குறைவதற்கு மந்திரங்களும் உளள்து. அதனை நாம் உச்சரிப்பதன் மூலம் கோபம் குறைந்து அமைதியான மனநிலை உண்டாகும். ஓகே வாருங்கள், கோபத்தை குறைக்கும் மந்திரங்கள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

கோபத்தை குறைக்கும் மந்திரம்:

கோபத்தை குறைக்கும் மந்திரம்

கோபத்தை குறைக்கும் மஹேஸ்வரி மந்திரம்:

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.

இம்மந்திரம் கோபத்தை குறைக்க உதவும் மஹேஸ்வரி மந்திரம் ஆகும். அதிக கோபம் அடையும் நபர், வீட்டின் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு பிரயாணம் செய்தால் கோபம் தணிந்து அமைதியான எண்ணம் உண்டாகும்.

வடகிழக்கு என்று சொல்லப்படும், ஈசானிய திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் அவதரித்தவள். சப்த கன்னியர்களில் இவரும் ஒருவர் ஆவர். இவரை வழிபட்டு வந்தால், நம்மிடம் உள்ள கோபம் நீங்கி சாந்தம் உண்டாகும்.

கோபம் குறைய என்ன செய்ய வேண்டும்

Vishnu Mantra to Control Anger in Tamil:

“ஓம் சாந்தே ப்ரஷாந்தே சர்வே க்ரோதோ பாஷா மணி ஸ்வாஹா”

கோபம் அடையும் நபர்கள் விஷ்ணுவின் ஓம் சாந்தே மந்திரத்தை தினமும் உச்சரித்து வரலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement