March Will Be a Good Month For These Zodiac Signs in Tamil
மாதத்திற்கு மாதம் கிரகங்களின் மாற்றம் நடைபெறும். அதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் கிரகங்களின் மாற்றத்தை பொறுத்து தான் வாழ்க்கையில் பலன்கள் மாறும். சிலருக்கு இந்த ஜோதிடங்களின் மீது நம்பிக்கை அதிகமாக இருக்காது. ஆனாலும் அவர்களின் பலன்கள் கண்டிப்பாக மாறுபடும். ஆகவே ஆன்மீக ரீதியாக யாருக்கு நம்பிக்கை இருக்கோ அவர்களுக்கு இந்த பதிவில் அவர்களின் ராசி இருக்கா என்றும், அதேபோல் என்ன மாற்றம் நடக்க போகிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்..!
March Will Be a Good Month For These Zodiac Signs in Tamil:
- மேஷம்
- மிதுனம்
- கடகம்
- துலாம்
- விருச்சகம்
- தனுசு
- கும்பம்
- மீனம்
மீன ராசி:
மீன ராசிக்கு காதல் வாழ்க்கையானது சாதகமான நாளாக இருக்கும். அதேபோல் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும். அதேபோல் திருமணம் ஆகாதவர்கள் இந்த மார்ச் மாதத்தில் அதற்கு ஏற்ற மாதிரி பலன்கள் கிடைக்கும். இந்த மாதத்தில் பணிகளில் திறமையை காட்டுவீர்கள். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கும்ப ராசி:
இந்த மாதம் சாதகமான நாளாக இருக்கும். அதேபோல் இந்த மாதத்தில் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். வீடு வாகனம் மாற்றம் ஆகும். வேலை இல்லாதவர்கள் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?
தனுசு ராசி:
மார்ச் மாதம் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரையில் முடியும். நீண்ட நாளாக பிரச்சனையில் உள்ள காரியங்கள் இந்த மாதம் முடிவுக்கு வரும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள்.
விருச்சக ராசி:
இந்த ராசிக்காரர்கள் இந்த மாதம் நல்ல பலன்களை பெறுவீர்கள். ஒரு முடிவை எடுக்கும் போது அதனை நன்கு தெரிந்துகொண்டு எடுங்கள். அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அவர்களின் திறமையை வெளிக்காட்டினால் அதற்கு ஏற்ற மாதிரி மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்கு இந்த மாதம் நிதி சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இந்த மாதத்தில் முதலீடு செய்யும் வகையில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். இந்த மாதம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
கடக ராசி:
இந்த மாதம் நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். திறமையை வெளிக்காட்டி பணிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். இம்மாதத்தில் நிலம் அல்லது வீட்டில் பணத்தை முதலீடு செய்வது நல்லது.
மிதுன ராசி:
முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் உங்களுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இதனால் நல்ல மாற்றத்தை மற்றும் முன்னேற்றத்தை இம்மாதத்தில் காண்பீர்கள்.
மேஷ ராசி:
இந்த மாதம் மிகவும் அதிர்ஷ்டசாலி ஆகுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். நீங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல பலன்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் அவர்கள் உங்களால் ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் எதை தொட்டாலும் இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |