மார்கழி மாதத்தில் பெண்கள் இதை மட்டும் செய்தால் போதும் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்..!

Advertisement

Margali Matham Poojai in Tamil

அனைத்து ஆன்மிக நெஞ்சங்களுக்கும் இனிய வணக்கங்கள்..! மாதங்களில் மிக சிறந்த மாதம் என்றால் அது மார்கழிதான். இதனை குறிக்கும் வகையில் கிருஷ்ண பகவானும் பகவத்கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். மேலும் பொதுவாக மார்கழி மாதம் பெருமாள் மற்றும் லட்சுமி தாயாரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாக உள்ளது.

அதனால் இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் பெண்கள் என்ன செய்தால் மனதில் நினைத்தது அனைத்தும் கைகூடும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.

மார்கழி மாத வழிபாடு முறை:

பொதுவாக நம் முன்னோர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி  பசும்சாணத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு அதன் பிறகு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் இதனை மேற்கொள்ளுவதில்லை.

Margazhi Matha Sirappu in tamil:

Margazhi matha sirappu in tamil

  • இந்த மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு பசும்சாணத்தை வைத்து வாசல் தெளித்து கோலம் போடவேண்டும்.
  • அப்படி உங்களுக்கு பசும்சாணம் கிடைக்கவில்லை என்றால் மஞ்சள்தண்ணீரை தெளித்தும் கோலம் போடலாம். அதன் பிறகு நீங்கள் போட்ட கோலத்தின் நடுவில் பசும்சாணம் அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து அதற்கு குங்கும பொட்டு வைக்கவேண்டும்.
  • பின்னர் அந்த பிள்ளையாருக்கு அருகம்புல் அல்லது பூசணிப்பூவை வைக்கவேண்டும். அப்படி உங்களுக்கு அந்த இரண்டும் கிடைக்கவில்லை என்றால் செம்பருத்தி பூ அல்லது சாமந்தி பூக்களை வைக்கலாம்.

Margali Matha Sirappugal in Tamil:

Margali Matha sirappugal in tamil

  • பின்னர் உங்கள் பூஜை அறைக்கு சென்று அங்குள்ள சுவாமி படங்களுக்கு மலர்கள் வைத்து விளக்கு ஏற்றிக்கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு பூஜை அறையிலும் ஒரு மஞ்சளால் பிள்ளையார் பிடித்து அதனை ஒரு வெற்றிலையின் மேலே வைத்து அதற்கு குங்கும போட்டு வைக்க வேண்டும்.
  • பின்னர் அதற்கும் அருகம்புல் வைத்து மனமுருகி பூஜை செய்யவேண்டும். இந்த வழிபாடு முறைகளை நீங்கள் இந்த மார்கழி மாதம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும்.
  • இந்த மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அரசமரம் மற்றும் வேப்பமரம் உள்ள கோவிலுக்கு செல்வது சிறப்புமிக்கது.
  • இந்த வழிபாட்டினை மார்கழி மாதம் முழுவதும் மேற்கொள்வதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். ரொம்ப நாளாக திருமணம் நடக்காமல் இருக்கும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நாடக்கும்.
  • மேலே கூறியுள்ள அனைத்து வழிபாட்டினையும் காலை 6 மணிக்குள் மேற்கொள்வது சிறப்பு.

 திருப்பாவை பாடல் 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement