மார்கழி மாதம் சிறப்புகள் | What is Special About Margazhi Month in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மார்கழி மாதத்தின் சிறப்புகள் பற்றி படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க. மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது குளிர் தான். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாததிற்கு வெவ்வேறு தனிச்சிறப்புகள் உள்ளது. இவற்றில் ஒரு சில மதனக்கில் மட்டுமே இறைவழிப்பாட்டிற்கு உரிய மாதமாக கருதப்படுகிறது.
அவற்றில் ஒன்று தான் மார்கழி மாதம் தான். மார்கழி மாதம் என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது அதிகாலை குளிரும், கோவில்களில் கேட்கும் பக்தி பாடல்களும் மற்றும் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் இடுவதும் தான். இவை அனைத்தையும் தாண்டி, மார்கழி மாதம் என்றாலே அதுவே தெய்வீக வழிபாட்டிற்கு உகந்த மாதம். எனவே, இம்மாதத்தின் சிறப்புகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் Margazhi Madham Sirappugal பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்.!
Margazhi Madham Sirappugal in Tamil:
- தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய காலமாக கருதப்படுகிறது.
- மார்கழி மாதம் என்பது தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம் ஆகும்.
- தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் தான் மார்கழி மாதம். குரு பகவான் வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிப்பது மிகவும் விசேஷமான கிரக அமைப்பு ஆகும்.
- மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பகவத் கீதையில் நான் மார்கழி என்று கூறி, மார்கழி மாதம் எவ்வளவு சிறப்பான மாதம் என்று கூறியிருக்கிறார்.
- ஆண்டாள் மார்கழியில் விரதம் இருந்து, திருமாலை மணம் முடித்தார்.
- மார்கழி மாதமே முழுவதும் பெருமாள் கோவில்களில் பஜனைகள் பாடப்படும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை ஒழிக்கும்.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியும் மிகவும் விசேஷமாக நடைபெறும்.
- மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவார்கள். அதாவது கடவுளை வழிபடும் மாதம்.
- மற்ற மாதங்களில் ஏதோ ஒரு சில நாட்கள் மட்டுமே இறைவனை வழிப்பட உகந்த நாளாக இருக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் உள்ள மொத்த நாட்களும் இறை வழிபாட்டிற்கு உகந்த நாளாக இருக்கிறது.
- மார்கழி மாதம், இறைவனை மட்டுமே வழிபடும் மாதமாக விளங்கியதால், இம்மாதத்தில் எந்த விதமான சுப நிகழ்ச்சிகளும் நடததப்படுவதில்லை.
- கோவில்களிலும் வீடுகளிலும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே கடவுள்களுக்கு பூஜைகள் ஆராதனைகள் நடத்தப்படும்.
- சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.
- மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும்.
- இதன்படி பார்த்தால், தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாக இருக்கிறது.
- மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும்.இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கடவுளை வழிப்படுவது மிகவும் நல்லது.
மார்கழி மாதத்தில் மட்டும் வாசலில் ஏன் பூசணி பூ வைக்கிறார்கள் தெரியுமா.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |