மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்

Advertisement

மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது ஏற்படுவது தான் கனவு. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக ஏற்படும். சில பேருக்கு பாம்பு, அம்மா, அப்பா, நண்பர்கள் போன்றவரையும் கனவில் காண்பார்கள். அதுமட்டுமில்லமால் அதிகாலையில் கண்ட கனவு பழித்திடுமோ என்ற பயமும் இருக்கும்.

நாம் கண்ட கனவிற்கு என்ன பலன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். நம் பதிவில் பல்வேறு வகையான கனவுகளுக்கு என்னென்ன பலன் என்பதை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

மாரியம்மன் கனவில் வந்தால் பலன்:

நீங்கள் தொழில் செய்பவராக இருந்து உங்கள் கனவில் மாரியம்மன் கனவில் வந்தால் நல்லது நடக்க போகிறது என்பதை தான் குறிக்கிறது. அதாவது நீங்கள் செய்யும் தொழிலில் ஏதாவது தடைகள் இருந்தால் நீங்க போகிறது என்பதை உணர்த்துகிறது. உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். அதுவே திருமணம் ஆகியிருந்தால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள்.

வேலை இல்லாதவர்கள் மாரியம்மனை கனவில் கண்டால் நீங்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். படித்து கொண்டிருப்பவர்கள் நன்றாக படிப்பார்கள்.

கோவில் கனவில் வந்தால்:

மாரியம்மன் கனவில் வந்தால் பலன்

மாரியம்மன் கோவிலை கனவில் கண்டால் நீங்கள் ஏதும் வேண்டுதல் வைத்திருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்கு இந்த கனவு வருகிறது. நீங்கள் ஏதும் சொத்து, நிலம் போன்றவை வாங்க நினைத்திருந்தால் அவை நிறைவேறும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

அதுவே நீங்கள் மாரியம்மன் சிலையை கனவில் கண்டால் அவரின் அருள் முழுமையாக இருக்கிறது. உங்களின் குடும்பத்திற்கு மாரியம்மனால் நல்லது மட்டுமே நடக்கும். நீங்கள் ஏதும் காரியம் நினைத்திருந்த அவை நடக்க வேண்டும் நினைத்திருந்தால் அவை நிச்சயம் நிறைவேறும்.

வீடு கட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

அபிஷேகம் செய்வது போல கனவு:

மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு எந்த கெட்ட செயல்களும் நடக்காது, அதுமட்டுமில்லாமல் தீமைகள் ஏதும் இருந்தால் அவை நீங்கி நன்மைகள் மட்டுமே நடக்கும்.

Samayapuram Mariamman Kanavil Vanthal Enna Palan:

நீங்கள் சமயபுரம் அம்மன் கனவில் வந்தால் நீங்கள் மனதில் நினைத்திருக்கின்ற விஷயம் நிறைவேறும் என்பதை உணர்த்துகிறது. நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் வந்து முடிவடையும் என்பதை உணர்த்துகிறது.

 

வீடு இடிந்து விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement