குஜ்கேது யோகம் பலன்கள் 2025
ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். இப்படி பெயர்ச்சி அடையும் போது பல வகையான யோகங்கள் நடக்கும். இந்த யோகங்கள் ஆனது 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தரும். அந்த வகையில் எவ்வை பகவான் மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகக்கூடிய யோகம் தான் குஜ்கேது யோகம். இந்த யோகமானது ஜூன் 7-ம் தேதி பெயர்ச்சி அடையவுள்ளது. செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைய இருக்கிறார். ஏற்கனவே இந்த ராசியில் கேது பயணித்து வருகிறார் இவர்கள் இருவரும் சேர்வதால் குஜ்கேது யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது 18 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கிறது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
துலாம்:

துலாம் ராசியில் 11-வது வீட்டில் செவ்வாய், கேது பெயர்ச்சியால் குஜ்கேது பெயர்ச்சியால் உங்களின் வருமானம் ஆனது அதிகரிக்க போகிறது. இருக்கின்ற வேலையிலிருந்து வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நேரத்தில் செல்லலாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக வேலையை பார்ப்பீர்கள். சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏதும் இருந்தால் அவை உங்களுக்கு இந்த நேரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் கூட இந்த நேரத்தில் அந்த வேலை ஆனது முடிவுக்கு வரும். இந்த நேரத்தில் நீங்கள் ஏதேனும் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யலாம். இந்த முதலீடானது நல்ல லாப தொகை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு ஆனது அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் 9-ம் வீட்டில் செவ்வாய் கேதுவின் சேர்க்கையால் குஜ்கேது யோகததால் இவர்கள் அதிர்ஷ்ட மழையில் நனையை போகிறார்கள் என்றே கூறலாம். நீங்க எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். வேலை சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் ஏதேனும் புதிய திட்டங்களை செலுத்த வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரத்தில் செயல்படுத்தலாம். இவை உங்களுக்கு சாதகமான பலன்களை தரக்கூடும். ஆன்மிகத்தில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்:

குஜ்கேது யோகமானது மிதுன் ராசியில் 3-வது வீட்டில் நிகழவுள்ளது. இதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்களுடைய எல்லா செயல்களுக்கும் உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் உங்களுடைய எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். பணியில் உங்களுடைய செயல்களை கண்டு பாராட்டுவார்கள். இதன் மூலம் மேல் அதிகாரிகள் பாராட்டுவார்கள். மேலும் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |









