செவ்வாய் பெயர்ச்சி 2023
ஆன்மீகத்தில் அனைத்து பெயர்ச்சியின் போது ஒவ்வொரு பகவானும் அவர் அவருடய ராசி மற்றும் நட்சத்திரத்தினை மாற்றி கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் ஜூன் மாதம் செவ்வாய் பெயர்ச்சியின் போது செவ்வாய் கடக ராசியில் பெயர்ச்சி அடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஜூலை மாதத்தில் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்து உள்ளது. இத்தகைய பெயர்ச்சியின் காரணமாக சில ராசிகளுக்கு எதிர்பாராத பலன்களை அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தாலும் கூட 5 ராசிகளுக்கு மட்டும் இதற்கான மாறான பலன்களை அளிக்கிறது. அதாவது கவலை அளிக்கும் வகையில் சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக 5 ராசிக்காரர்கள் சந்திக்க போகிறார்கள். அது எந்தந்த ராசிகள் என்று பதிவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்..!
Mars Transit 2023 July:
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 1-ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இவர்கள் இருவரும் எதிர் எதிரே பார்ப்பதால் சமசப்தக யோகம் உருவாகிறது. இத்தகைய யோகத்தினால் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் பாதிப்பு அளிக்கும் வகையில் பலன்கள் இருப்பதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
மேஷ ராசி பலன்:
இத்தகைய செவ்வாய் பெயர்ச்சின் காரணமாக உருவாகும் யோகத்தினால் மேஷ ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் எந்த செயலை செய்தாலும் அதில் எச்சரிக்கையுடனும், கவனமாக இருக்க வேண்டும்.
உடலில் சிறிய அளவில் பிரச்சனைகள் வந்தாலும் கூட அதனை உடனே கவனிக்க வேண்டியது நல்லது.
கன்னி ராசி பலன்:
கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுவது சிறந்தது. அதேபோல் நிதிநிலை மிகவும் குறைவான நிலையில் இருப்பதால் தேவையற்ற செலவுகள் அனைத்தினையும் குறைத்து கொள்வது நல்லது.
மேலும் உடல் நலக்குறைபாடு அடிக்கடி வரும் வாய்ப்புகள் இருப்பதால் அதனை உடனே மருத்துவமனைக்கு சென்று ஆரம்ப நிலையிலேயே சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
அடுத்த மாதம் 4 கிரக பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நல்லது தெரியுமா |
மகர ராசி:
இந்த செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு செல்வது மகர ராசிகாரர்களுக்கு சாதகமாக இருக்காது. ஆகையால் பொறுமையுடன் இருந்து செயல்பட்டால் மட்டுமே எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும். மேலும் இனி வரும் காலங்களில் போதிய அளவு பொருளாதார நிலை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படலாம்.
அதுமட்டும் இல்லாமல் குடும்பத்தில் ஒற்றுமை இழந்து மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
கடக ராசி பலன்:
செவ்வாய் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தாலும் கூட கடக ராசிக்காரர்களுக்கு போதுமான அளவு நன்மை அளிக்கும் வகையில் பலன்களை அளிக்கவில்லை.
ஆகையால் கடக ராசிக்காரர்கள் வீண் விவாதங்கள் மற்றும் சண்டை நடக்கும் இடத்தில் இருந்து முற்றிலும் விலகி இருப்பது நல்லது. ஏனென்றால் உங்களுக்கு பிரச்சனை ஆனது எப்போது வேண்டுமானாலும் வரக்கூடியதாக இருப்பதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதேபோல் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.
மீனம் ராசி பலன்:
ராசியில் கடைசி ராசியான மீன ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்கள் யாவும் கொஞ்சம் சவாலுடன் இருந்தாலும் கூட விடா முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். மேலும் பணியிடத்தில் சக பணியாளர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே உங்களுடைய பணிகளை பூர்த்தி செய்ய முடியும்.
ஆகவே எதை செய்தாலும் நம்பிக்கையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |