செவ்வாய் சிம்மத்தில் பெயர்ச்சி 2025
ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். இந்த பெயர்ச்சி ஆனது குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கும் ஒரு ராசியில் பயணிப்பார். தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் பயணித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஜூன் மாதம் 7-ம் தேதி சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி ஆனது 12 ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
மேஷம்:
செவ்வாய் பகவான் மேஷ ராசியில் 5- வது வீட்டிற்கு செல்கிறார். இந்த ராசியில் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். இத்தனை நாட்கள் வேலையில்லாமல் இருந்தால் இந்த நேரத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கும். அது போல ஏற்கனவே வேலையில் இருந்து அந்த வேலை பிடிக்காமல் மாற்ற நினைத்தால் இந்த நேரம் உகந்ததாக இருக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். திடீரென்று பணவரவு அதிகரிக்கும். இதன் மூலம்மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் செவ்வாய் பகவான் 10-வந்து வீட்டில் பெயர்ச்சி அடைய போகிறார். இதனால் இந்த காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்களுடைய தன்னம்பிக்கையானது அதிகரிக்கும். இதனால் நீங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் நீங்கள் மகிழ்ச்சி அடைய கூடிய செய்திகள் வரும்.
துலாம்:
செவ்வாய் பகவான் துலாம் ராசியில் 11-வது வீட்ல பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் உங்களுடைய வருமானம் ஆனது அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களின் திறமையை வெளிப்டுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். நிலம்அல்லது சொத்து தொடர்பான பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும். நீங்கள் இந்த நேரத்தில் புதிதாக வேலை தொடங்கலாம். அவை நல்ல முடிவுக்கு வரும். அது போல உங்களின் இலக்குகளை அடைவதற்குஇவை சரியான நேரமாக இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |