மருதமலை சத்தியமா உன் ஆறுபடையும் சண்முகா பாடல் வரிகள்..! | Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

Advertisement

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மருதமலை சத்தியமா உன் ஆறுபடையும் சண்முகா பாடல் வரிகள் (Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, ஒவ்வொரு கடவுளையும் தனித்துவமாய் போற்றி வணங்கக்கூடிய அளவிற்கு ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வகையான பாடல்கள் உள்ளது. அப்பாடல்களை எல்லாம் நாம் உச்சரித்து கடவுளை வணங்கும்போது, நம் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகிறது. எனவே, இப்பதிவில் அமரேசன் ,அமுதன், அறுமுகச்சிவன், அழகப்பன், ஆறுமுகம், ஆறுமுகவேலன், உதயகுமாரன் போன்ற செல்ல பெயர்களால் அன்போடு அழைக்கப்படும் ஆறுபடை முருகனை போற்றி பாடக்கூடிய மருதமலை சத்தியமா ஆறுபடையும் சண்முகா பாடல் வரிகளை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

நாத விந்து கலாதீ நமோநம பாடல் வரிகள்

மருதமலை சத்தியமா முருகன் பாடல் | maruthamalai sathiyama lyrics in tamil:

மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

ஆதிசிவன் மேல சத்தியமா
அந்த ஆனைமுகன் மேல சத்தியமா
ஆறுமுகன் மேல சத்தியமா
அந்த ஞான பழம் மேல சத்தியமா

ஒத்த மனசுல மொத்த நெனப்புல
கூடி இருக்குற சண்முகா
ஆறுபடையும் சண்முகா
நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்

மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

திருத்தனி வீட்டுக்குள்ளே
ஒரு தீபம் தெரியுமே சண்முகா
தீபம் தெரியுமே சண்முகா
உன் பாதம் தெரியுமே சண்முகா

அரோகரா கோசத்துலே
உன் முகம் சிரிக்குமே சண்முகா
முகம் சிரிக்குமே சண்முகா
ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா

திருத்தனி வீட்டுக்குள்ளே
ஒரு தீபம் தெரியுமே சண்முகா
தீபம் தெரியுமே சண்முகா
உன் பாதம் தெரியுமே சண்முகா

சுவாமியே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்

அரோகரா கோசத்துலே
உன் முகம் சிரிக்குமே சண்முகா
முகம் சிரிக்குமே சண்முகா
ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா

உக்கிர நாளிலும் சண்முகா
நல்ல உச்சவ நாளிலும் சண்முகா
நாளும் கிழமையும் சண்முகா
ஒரு உண்மைய சொல்லவா சண்முகா

ஆறுபடையிலும் ஆறுகாலத்திலும்
பூஜை நடக்குமே சண்முகா
பூஜை நடக்குமே சண்முகா
நல்ல பூஜை நடக்குமே சண்முகா

செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்

மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

பழமுதிர் சோலையிலே
ஒரு தேரு நடக்குமே சண்முகா
தேரு நடக்குமே சண்முகா
தங்க தேரு நடக்குமே சண்முகா

ராஜநடை போட்டு வந்து
புதுயோகம் கொடுக்குமே சண்முகா
யோகம் கொடுக்குமே சண்முகா
சுப யோகம் கொடுக்குமே சண்முகா

பழமுதிர் சோலையிலே
தேரு நடக்குமே சண்முகா
தேரு நடக்குமே சண்முகா
தங்க தேரு நடக்குமே சண்முகா

ராஜநடை போட்டு வந்து
புதுயோகம் கொடுக்குமே சண்முகா
யோகம் கொடுக்குமே சண்முகா
சுப யோகம் கொடுக்குமே சண்முகா

ஊரு உலகமும் சண்முகா
தேருவடம் இழுக்குமே சண்முகா
பக்தி வெள்ளத்திலே சண்முகா
உன் தேரு மிதக்குமே சண்முகா

ராஜ ரத்தத்திலே சிம்மாசனத்திலே
வீதி உலா வரும் சண்முகா
வீதி உலா வரும் சண்முகா
என் நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்

மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

தென்பழனி சுத்தி சுத்தி
மயில் பறக்குது சண்முகா
மயில் பறக்குது சண்முகா
உன்னை தேடி பறக்குது சண்முகா

கிட்ட வந்து எட்டி நின்னு
என்னை பாத்து சிரிக்கிது சண்முகா
பாத்து சிரிக்கிது சண்முகா
கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா

தென்பழனி சுத்தி சுத்தி
மயில் பறக்குது சண்முகா
மயில் பறக்குது சண்முகா
உன்னை தேடி பறக்குது சண்முகா

கிட்ட வந்து எட்டி நின்னு
என்னை பாத்து சிரிக்கிது சண்முகா
பாத்து சிரிக்கிது சண்முகா
கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா

வீரபாகுவின் பக்கமா
அந்த வீரவேலுவின் பக்கமா
அஞ்சுகரனின் பக்கமா
அந்த ஐராவதம் பக்கமா

தங்கநிறத்துல ரெண்டு கண்ணுக்குள்ள
கொழுவிருக்கிற சண்முகா
நீ கொழுவிருக்கிற சண்முகா
என் கண்ணுக்குள்ளதான் சண்முகா

செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்

மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

திருச்செந்தூர் கோயிலிலே
வேலாடனும் சண்முகா
வேலாடனும் சண்முகா
வெற்றி வேலாடனும் சண்முகா

தில்லையாண்டான் தில்லையென
வரம் கொடுக்கனும் சண்முகா
வரம் கொடுக்கனும் சண்முகா
நீ வரம் கொடுக்கனும் சண்முகா

திருச்செந்தூர் கோயிலிலே
வேலாடனும் சண்முகா
வேலாடனும் சண்முகா
வெற்றி வேலாடனும் சண்முகா

தில்லையாண்டான் தில்லையென
வரம் கொடுக்கனும் சண்முகா
வரம் கொடுக்கனும் சண்முகா
நீ வரம் கொடுக்கனும் சண்முகா

கண்ணு படும்படி சண்முகா
இந்த காலம் முழுவதும் சண்முகா
உன்னை நினைக்குறேன் சண்முகா
நல்ல செல்வம் கொளிக்கனும் சண்முகா

சொன்ன வரங்கள அள்ளி கொடுக்குற
கொடை வள்ளலே சண்முகா
கோடி வணக்கம் சண்முகா
பல கோடி வணக்கம் சண்முகா

செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்

அய்யா மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

திருப்பரங்குன்றத்திலே
ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா
பாட்டு படிக்கணும் சண்முகா
புது பாட்டு படிக்கணும் சண்முகா

புள்ளி மயில் ஏறிவந்து
நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா
கேட்டு ரசிக்கணும் சண்முகா
வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா

திருப்பரங்குன்றத்திலே
ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா
பாட்டு படிக்கணும் சண்முகா
புது பாட்டு படிக்கணும் சண்முகா

புள்ளி மயில் ஏறிவந்து
நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா
கேட்டு ரசிக்கணும் சண்முகா
வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா

பூபாலமும் ஆடுமே
ஒரு ஆலோலமும் பாடுமே
கந்த சஷ்டியும் ஆடுமே
உன் கந்த புராணமும் பாடுமே

சின்ன நிலவிலும் சின்ன விளக்கிலும்
காட்சி கொடுக்கணும் சண்முகா
உன்னை நினைக்கிறேன் சண்முகா
என் நெஞ்சுக்குள்ளேதான் சண்முகா

செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்

ஆமா மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

சுவாமிமலை உச்சியிலே
உன் கொடி பறக்குமே சண்முகா
கொடி பறக்குமே சண்முகா
சேவல் கொடி பறக்குமே சண்முகா

ஆடி வரும் காவடிக்கு
அது சொல்லி கொடுக்குமே சண்முகா
சொல்லி கொடுக்குமே சண்முகா
வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா

சுவாமிமலை உச்சியிலே
கொடி பறக்குமே சண்முகா
கொடி பறக்குமே சண்முகா
சேவல் கொடி பறக்குமே சண்முகா

ஆடி வரும் காவடிக்கு
அது சொல்லி கொடுக்குமே சண்முகா
சொல்லி கொடுக்குமே சண்முகா
வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா

எந்த நேரத்திலும் சண்முகா
நீ நின்ற கோலத்திலே சண்முகா
அண்டும் வினைகளை விரட்டி
குலம் காக்கும் தெய்வமே சண்முகா

சன்னிதானம் அதை சுத்தி வளம் வர
நெஞ்சம் உருகுதே சண்முகா
நெஞ்சம் உருகுதே சண்முகா
என் உள்ளம் உருகுதே சண்முகா

செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்

மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா

தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement