Maruthani Kanavil Vanthal Enna Palan | மருதாணி செடி கனவில் வந்தால் என்ன பலன்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மருதாணி கனவு பலன்கள் பற்றி கொடுத்துள்ளோம். நம்மில் பலருக்கும் மருதாணி கனவில் வந்திருக்கும். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ஏற்படுவது இயல்பானது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு வரும். சில கனவுகள் நினைவில் இருக்கும். சில கனவுகள் நினைவில் இருக்காது. நினைவில் இருக்கின்ற கனவிற்கு என்ன பலன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அது போல விடியற்காலையில் காண்கின்ற கனவு பலிக்கும் முன்னோர்கள் கூறுவார்கள். இதனாலேயே நாம் காண்கின்ற கனவிற்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் அதிகமாக இருக்கும்.
மருதாணி இலை கனவில் வந்தால்:
கனவு கான்பவர் அவருடைய கைகளில் மருதாணி போட்டிருப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு திருமணம் கை கூடி வரும் என்பதை உணர்த்துகிறது. அதுவே வேறு ஒருவருடைய கைகளில் மருதாணி போட்டிருப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும் என்பது அர்த்தமாக இருக்கிறது.
மருந்தானி விழுதை கனவில் கண்டால்:
மருதாணியை அரைத்து அதனை எடுத்து சென்று கைகளில் வைப்பது போல கனவில் கண்டால் அவர்களுடைய வாழ்க்கை முறை மாறும். மேலும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
அதுவே ஒரு பெண் கைகளில் மருந்தானியை வைத்து அது நல்லாயில்லை என்று நினைத்தால் அவரின் வாழ்க்கையில் பொருத்தமில்லாத ஒருவரை திருமணம் செய்ய போகிறார் என்பதை உணர்த்துகிறது.
மருதாணியின் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?
இரு கைகளிலும் மருதாணி வைத்தால்:
ஒரு பெண் தன்னுடைய இரு கைகளிலும் மருதாணி வைப்பது போல கனவு கண்டால் உங்களுடைய கல்யாண வாழ்க்கையில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். அதவாது பணத்திற்கு எந்த பஞ்சமும் இருக்காது. மேலும் நீங்கள் வாழ்க்கை ரொம்ப ஈசியாக கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
மருதாணி இலையை கனவில் கண்டால்:
மருதாணி இலைகளை கனவி கண்டால் உங்களுடைய வாழ்க்கை நிலையானது மேம்படும். அதவாது நீங்கள் வறுமை நிலையில் இருந்தால் அதிலிருந்து சற்று மேம்படுவீர்கள்.
மருதாணி செடி கனவில் வந்தால்:
மருதாணி செடியை கனவில் கண்டால் இதுவரை உங்களின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மேலும் உங்களின் செல்வ நிலையானது அதிகரிக்கும்.
மருதாணி போட்டால் ஒரு வாரம் உங்களை எமன் நெருங்க மாட்டாரா ..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |