மருதாணி செடியின் ரகசியம் / Maruthani Sediyin Ragasiyam
இன்றைய பதிவில் மருதாணி செடியின் ரகசியம் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். மருதாணி செடியில் அதிக நன்மைகள் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மருதாணி செடியில் நமக்கு தெரியாத நிறைய ரகசியங்கள் இருக்கின்றன.மருதாணி மங்கள பொருளின் அடையாளம் மட்டுமல்லாமல் செல்வத்திற்கான அடையாளமாகவும் திகழ்கிறது.மகாலெட்சுமி அம்சம் நிரம்பிய செடிகளில் ஒன்று மருதாணி செடியாகும். லட்சுமி தேவிக்கு விருப்பமான மகாலெட்சுமி வாசம் பொருட்களின் ஒன்றாக கருதப்படுகிறது. மருதாணி செடி மனதிற்கு மகிழ்ச்சியை தரக் கூடிய ஒன்றாகும். மருதாணி செடியை பறிப்பது முதல் அதை அரைத்து கையில் வைக்கும் வரை பல வழிமுறைகள் இருக்கிறது என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இந்த பதிவில் மருதாணி செடியின் ரகசியம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….
மருதாணி செடியின் சிறப்பு:

- மருதாணி செடியில் ராஜ யோகம் தரும் ரகசியம் இருக்கிறது என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. மருதாணியை வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மருதாணி வைப்பதுமிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
- மேலும், முக்கியமாக சுக்கிர ஓரை நேரத்தில் கைகளில் மருதாணி வைத்துக்கொண்டால் ராஜயோகம் மற்றும் அதிக அதிர்ஷ்டம் கிடைக்கும். மேலும், பஞ்சமி, தசமி மற்றும் ஏகாதசி போன்ற திதிகளிலும், பரணி, பூரம் மற்றும் பூராடம் போன்ற நட்சத்திரங்களில் மருதாணி வைத்தால் ஐஸ்வர்யம் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.
- மாலையில் விளக்கு ஏற்றிய பிறகும் சூரியன் அஸ்தமனம் ஆனதுக்கு பிறகும் மருதாணி இலையை பறிக்க கூடாது. ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களிலும் அந்தந்த நாளில் மருதாணி வைப்பவர்களுக்கு சந்திராஷ்டமம் இருந்தால் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த முறையில் நம்பிக்கையுடன் செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும்.
மருதாணி போட்டால் ஒரு வாரம் உங்களை எமன் நெருங்க மாட்டாரா ..!
மருதாணி வைப்பதற்கான காரணம்?
திருமணம் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் மருதாணி வைப்பது பாரம்பரியமாக கருதப்படுகிறது. உடலில் இருக்கும் உடல் சூட்டை குறைக்கவும் உடலில் பித்தத்தை கட்டுப்படுத்தவும் மருதாணி வைக்கிறார்கள் என மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. பெண்கள் மருதாணி வைத்துக்கொள்வதன் மூலம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கலைகள் உள்ளன. மருதாணி வைப்பதன் மூலம் இந்த கலைகள் உண்டாகும் என கூறப்டுகிறது. அதில் ஆண்கள் சூரிய கலையும் பெண்கள் சந்திரக் கலையும் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் இந்த கலைகள் வந்துவிட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
மருதாணி வைப்பதால் செல்வம் அதிகரிக்குமா?
- பெண்கள் கையில் மருதாணி வைப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் செல்வம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிகள் அதிகரிக்க கூடும். கண்திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகளை தடுக்கவும் இது உதவுகிறது.
- மேலும், ஜோதிட சாஸ்த்திரங்களில் ஒன்றான கைரேகை ஜோதிடத்தில் கை ரேகையை வைத்தே ஒருவரின் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை சொல்ல முடியும் என்பது ஆகியவற்றிற்கு தெரிந்த ஒன்றாக இருக்கிறது.அப்படி ரேகைகள் ஒன்று சேரும் இடத்தில் மருதாணி வைப்பதால் ரேகைகள் பலிச்சிடக் கூடும்.
- பழங்காலத்தில் மருதாணி வைப்பதற்கு என்று ஒரு வழக்கமான முறை இருந்துள்ளது. அந்த முறையானது உள்ளங்கையில் பெரிய வட்டமும் அதை சுற்றி சிறிய வட்டமும் வைப்பார்கள். இதில் பெரிய வட்டத்தை சூரியனையும் அதை சுற்றி வைக்கும் சிறிய புள்ளிகளை கோள்களையும் குறிக்கிறது.
- இந்த முறையில் மருதாணி வைப்பதன் மூலம் சூரியனும் , நவகிரகங்களும் பலப்படும் என்றும், கோள்களில் ஏற்படும் பாதிப்பு குறையும் என்றும் கூட்டப்படுகிறது.மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறையான ஆற்றலையும் அளிக்கிறது.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |











