வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா.? இருக்கக்கூடாதா.?

Updated On: September 12, 2025 12:42 PM
Follow Us:
mathavidai kalathil sashti viratham irukalama
---Advertisement---
Advertisement

மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா.? 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பலரும் கந்த சஷ்டி விரதத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். கந்த சஷ்டி விரதம் இருந்தால், முருகன் வேண்டிய வரத்தினை அருள்வார். அதனால், முருகனின் அருளையும், கேட்டதை பெறவும் கந்த சஷ்டி விரதம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆண்களை விட பெண்களே அதிக எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள். ஆனால், ஒரு சிலர் பெண்களுக்கு சஷ்டி விரதம் ஆனது, மாதவிடாய் காலத்தில் வரும். அதனால், பெண்கள் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள்.

இதனால், மாதவிடாய் காலத்தில் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா.? இருக்கக்கூடாதா.? என்று பெரியவர்களிடம் கேட்பார்கள். இந்த குழப்பம் பெரியவர்களுக்கே இருக்கும். ஆகையால், உங்கள் குழப்பத்தினை தீர்க்கும் விதமாக இப்பதிவில் மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா.?  இருக்கக்கூடாதா.? என்பதை பின்வருமாறு கொடுத்த்துள்ளோம். எனவே, பதிவினை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா.? இருக்கக்கூடாதா.?

மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா

 மாதவிடாய் காலத்தில் பெண்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாம். ஆனால், அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது. அதன்படி இருந்தால் எந்த தவறும் இல்லை.  மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்க நினைக்கும் பெண்கள், பூஜை அறைக்கு செல்லாமல், விரதத்தினை மேற்கொள்ளலாம்.  அதுமட்டுமில்லாமல் காப்பும் கட்டிக் கொள்ளக் கூடாது. பூஜை அறைக்கு செல்லாமல், விரதம் இருக்கலாம். மேலும், முறைகனின் பக்தி பாடல்கள் மற்றும் மந்திரங்களை கேட்கலாம் அல்லது உச்சரிக்கலாம்.  திருமணம் ஆன பெண்ணாக இருந்தால், கணவரை வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகன் படத்திற்கு பூஜை செய்து நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய சொல்லலாம். அதுவே, திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தால், உடன் பிறந்தவர்கள் அல்லது அம்மாவை வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகன் படத்திற்கு பூஜை செய்து நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய சொல்லலாம்.

கந்த சஷ்டி விரதம் 7 நாட்களும் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்.!

அதேபோல், கந்த சஷ்டி விரதம் கடைசி நாளான 7 ஆம் நாள், 1 டம்ளர் பால் காய்ச்சி, முருகனை நினைத்து குடித்து விரதத்தினை நிறைவு செய்யலாம். மாதவிடாய் காலம் முடிந்ததும், முருகன் கோவிலுக்கு சென்று, என்னால் முழுமையாக உன்னை வணங்கி வழிபட முடியவில்லை. அடுத்த வருடம், நான் முழுமையாக விரதம் இருந்து உன்னை தரிசித்து வழிபடுகிறேன் என்று கூறி விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். முருகன் பார்த்துக்கொள்வார்.

அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலானது மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும். இதனால், விரதம் இருக்க நினைக்கும் பெண்கள் அதிக நீரையும், பால் பழங்களையும் உட்கொள்வது மிகவும் அவசியம். உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளவர்கள், சிறிய அளவிலான உணவினை உட்கொண்டு விரதம் இருக்கலாம். இல்லையென்றால் மூன்று வேலையும் உணவு சாப்பிட்டு கூட விரதமிருக்கலாம். இதனால் எந்த தவறும் இல்லை. முருகனை நாள் முழுவதும் நினைக்க மட்டும் மறந்துராதீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now