வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதவிடாய் இரத்தம் கனவில் வந்தால் என்ன பலன்..! | Mathavidai Ratham Kanavil Kandal In Tamil..!

Updated On: September 12, 2025 12:38 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

மாதவிடாய் இரத்தம் கனவில் வந்தால் என்ன பலன் | Mathavidai Ratham Kanavil Kandal In Tamil

நாம் தூங்கும் போது நமக்கு பல்வேறு கனவுகள் வரும் ஆனால் நாம் காலை எழுந்திருக்கும் பொழுது நமக்கு கனவு என்ன என்று பெரும்பாலும் ஞாபகம் இருக்காது. நாம் நல்ல மகிழ்ச்சியான கனவு கண்டிருந்தால் தூக்கத்திலே சிரிப்போம் ஆனால் கெட்ட கனவு கண்டிருந்தால் தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவோம் காலையும் அதே கனவை பற்றி யோசித்து கொண்டிருப்போம். நீங்கள் மாதவிடாய் இரத்தம் வருவதை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் மன குழப்பத்திலும் வருத்தத்துடனும் இருப்பார்கள். அவர்கள் மிகவும் சோர்வாகவும் எரிச்சல் உடனும் இருப்பார்கள். மாதவிடாய் வரும் பொழுது பெண்கள் பொதுவாகவே மன கவலையோடு தான் இருப்பார்கள. அந்த சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!

மாதவிடாய் இரத்தம் கனவில் வந்தால் என்ன பலன்:

Mathavidai Ratham Kanavil Kandal In Tamil:

  • மாதவிடாயை கனவில் கண்டால் அது உங்கள் வாழ்வில் வர இருக்கும் சிக்கல்களை குறிப்பால் உங்களுக்கு உணர்த்துவதாக அர்த்தம்.
  • மாதவிடாய் இரத்தம் உங்கள் கால்களில் ஓடுவது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.
  • மாதவிடாய் இரத்த கரையை துணிகளில் பார்ப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு அவமானம் நேர போகிறது என்று அர்த்தம்.
  • வேறு ஒருவரின் மாதவிடாய் கரையை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பிரச்சனை உருவாக போகிறது என்று அர்த்தம்.
  • மாதவிடாய் கனவில் வேறு ஒரு நிறத்தில் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் குழப்பமான நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
  • மாதவிடாய் மற்றவர்கள் மத்தியில் வருவது போல் கனவு கண்டால் நீங்கள் வதந்திகள் குறித்து ஜாகிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

திருமண பெண் மாதவிடாய் கனவில் கண்டால்:

திருமணமான பெண் மாதவிடாயை கனவில் கண்டால் விரைவில் கர்ப்பம் தரிப்பால் என்று அர்த்தம்.திருமணமாகாத பெண் மாதவிடாயை கனவில் கண்டால் உடலில் பாதிப்பு வரும் என்று அர்த்தம்.

கர்ப்பிணி பெண் மாதவிடாய் கனவில் கண்டால்:

  • கர்ப்பிணி பெண்கள் மாதவிடாயை கனவில் கண்டால் உங்களுடைய பிரசவம் சீராக இருக்கும் என்று அர்த்தம்.
  • ஆண்கள் தங்கள் மனைவிக்கு மாதவிடாய் வருவது போல கனவு கண்டால் உங்கள் இருவருக்கும் உறவு மேம்படும் என்று அர்த்தம்.
  • வயதான பெண்கள் மாதவிடாயை கனவில் கண்டால் உங்கள் இல வயது காலத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது என்று அர்த்தம் .
  • சிறு வயது பெண்கள் மாதவிடாயை கனவில் கண்டால் அவர்கள் நினைக்கும் காரியம் வெற்றி அடையும் என்று அர்த்தம்.

மாதவிடாய் ஆவது போல் கனவு கண்டால்:

மாதவிடாய் ஆவது போல கனவு கண்டால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க கூடிய பிரச்சனையை பற்றி கூறுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயம் செய்தாலும் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட வேண்டும் என்பதனை குறிக்கிறது.

மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா.? 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now