மாட்டு பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும்..!

Advertisement

Mattu Pongal Andru Enna Seiya Vendum In Tamil..!

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகும். பொங்கலுக்கு அடுத்த நாள் வரும் மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளை பூஜை செய்து வழிபடுவார்கள். உழவுத் தொழிலான விவசாயத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடு வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இந்த நாளில் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான மாட்டு பொங்கல் அன்று அனைவரும் மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து வணங்குவர். மாடு இல்லாதவர்கள் அருகில் இருக்கும் கோவில்கள் அல்லது கோசாலைகளுக்கு சென்று கோ பூஜை செய்து வழிபடுவார்கள். இன்றைய பதிவில் மாட்டு பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும் மற்றும் எப்படி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் 2025 | Mattu Pongal Vaikka Nalla Neram 2025

மாட்டு பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும்:

மாடு வைத்திருப்பவர்கள் மாட்டு பொங்கல் அன்று மாடுகளை குளிக்க வைத்து, குங்கும பொட்டு வைத்து, சலங்கை கட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரிப்பார்கள். மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, சாம்பிராணி காட்டுவார்கள். மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து, அந்த பொங்கலை மாட்டிற்கு ஊட்டி, மாட்டு பொங்கலை கொண்டாடுவார்கள்.

மாடு இல்லாதவர்கள் மாட்டு பொங்கல் அன்று முன்னோர்களை வழிபட வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று சிலர் அசைவம் சமைத்து முன்னோர்களுக்கு படையல் இடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் வடை, பாயசம் ஆகியவற்றுடன் நமது முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் சமைத்து படைப்பார்கள்.

சைவம் உணவுகளை படையல் வைப்பவர்கள் சுவாமி படத்திற்கு முன்பாகவோ அல்லது முன்னோர்கள் படத்திற்கு முன்பாகவோ வைப்பார்கள். அசைவம் வைப்பவர்கள் நடுவீட்டில் வைக்கும் பழக்கம் உள்ளது. மூன்று இலைகளில் படையல் இட்டு, அவற்றுடன் வேட்டி, துண்டு, புடவை ஆகியவற்றையும் வைத்து படைத்து வழிபட வேண்டும். நமது முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டும் என வழிபட்டு, அவர்களின் ஆசியையும், கடவுளின் ஆசியையும் பெற வேண்டும்.

காமதேனு வழிபாடு:

மாட்டுப் பொங்கல் அன்று காமதேனுவையும், நந்தி தேவரையும் வழிபட வேண்டும். அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று நந்தி தேவரை வழிடலாம். காமதேனு இருந்தால் காமதேனுவை வழிபடலாம். அல்லது பசு மடம் இருந்தால் அங்கு சென்று பசுக்களை வழிபட்டு, உணவளிக்கலாம். காகம், நாய்கள், மாடுகள் போன்றவற்றிற்கு உணவளிக்கலாம்.

மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்வது மிக சிறப்பானது. கோ பூஜை செய்து வழிபட்டால் அனைத்து ஐஷ்வரங்களையும் பெறலாம். மேலும் ஆண்டிற்கு ஒரு முறையாவது மாட்டு பொங்கல் அன்று பூஜை செய்து வழிபட்டு வந்தால் சிக்கல்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement