Mattu Pongal Mantra
பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல். இந்த மாட்டு பொங்கல் ஆனது விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று மாடுகளை குளிப்பாட்டி, அதற்கு பொட்டு வைத்து, மாலைகளை அணிவிப்போம். மேலும் மாலை வந்ததும் பொங்கல் வைத்து, பூஜை செய்வோம். இந்த பூஜையில் செல்வம் அதிகரிப்பதற்காக உள்ள மந்திரம் மற்றும் தீப முறையை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.
மாட்டுப் பொங்கல் அன்று சொல்ல வேண்டிய மந்திரம் ஏற்ற வேண்டிய தீபம்:
மாடு வைத்திருப்பவர்கள் இந்த பூஜை செய்வார்கள். மாடு இல்லாதவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும். மாடு இல்லாதவர்கள் மாடுகளை பார்க்க முடிந்தால் எதாவது உணவு வாங்கி கொடுக்கலாம். இது போல் வாங்கி கொடுப்பது தேவர்களின் அருள் ,முழுமையாக கிடைக்கும். எனக்கு இது போல வாங்கி கொடுக்க முடியாது என்பவர்கள் கீழே கூறியுள்ள தீப முறையை பின்பற்றலாம்.
பஞ்ச காவிய விளக்கு. இந்த பஞ்ச காவிய விளக்கு ஏற்றுவதால் அற்புதமான பலனை தரும். அதனால் மாட்டு பொங்கல் அன்று ஒரு முகமாகவோ அல்லது 5 முகமாகவோ தீபம் ஏற்ற வேண்டும். என்ன மந்திரம் சொல்வது என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
கோ பூஜை மந்திரம் | கோமாதா ஸ்தோத்திரம்
ஓம் பசுபதயேசு வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி ப்ரசோதயாத்
மேல் கூறியுள்ள மந்திரத்தை 5 முறை கூறுங்கள். இல்லையென்றால் உங்களால் எத்தனை முறை கூற முடியுமோ அதனை முறை கூறுங்கள். நீங்கள் இந்த மந்திரத்தை கூறுவதால் செல்வா நிலை உயருவதை காணலாம். மேலும் உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களும் நீங்கும். எந்த விஷத்தையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் அதற்கான பலனை முழுமையாக பெறுவீர்கள். அதனால் இந்த மந்திரத்தையும் முழு மனதுடன் செய்து அதற்கான பலனை காணுங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |