மே மாத ராசி பலன்கள் 2023
அடுத்த மாதம் நவ கிரங்களின் பயணத்தால் சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது. நவ கிரகங்களின் தலைவனாக இருப்பது சூரியன். இவர் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிகளில் பயணம் செய்ய போகிறார். மே 12-ம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 15-ம் தேதி சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறாரார். இந்த மாதம் இறுதியில் சுக்கிரன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். அதனால் எந்த ராசிக்கு அடுத்த மாதம் அதிர்ஷ்ட மழை அடிக்க போகின்றது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்கள் சூரியனை அதிபதியாக கொண்டிருக்கிறார்கள். நவ கிரகங்களின் ஆதிக்கத்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குரு பகவானின் உங்களின் மேல் படுவதால் இதுவரை இருந்த கஷ்டங்கள் நீங்கும். மே மாதம் முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்லுறவை பராமரிப்பீர்கள். திருமானவர்களுக்கு புத்திரம் பாக்கியம் கிடைக்கும்.
குரு உதயமாவதால் இந்த 5 ராசிக்காரர்கள் தான் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நனைய போகின்றார்கள்..!
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் புதனை அதிபதியாக கொண்டிருக்கிறார்கள், நவ கிரங்ககளின் ஆதிக்கத்தால் மே மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளும் தேடி வரும். பணமழையில் நனைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். சிறியதாக ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். புதிதாக நட்பானவர்களிடம் பண விஷயத்தை ஒப்படைக்க வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானை அதிபதியாக கொண்டிருக்கிறார்கள். குரு பகவானின் பார்வை உங்களின் மேல் படுவதால் உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைக்கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களின் துணையுடன் சண்டைகள் ஏற்படும் பொழுது விட்டு கொடுத்து செல்வது நல்லது. அடுத்த மாதம் நிதிநிலையில் எந்த பிரச்சனையும் இருக்காது.
மகரம்:
மே மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம், அதனால் கொஞ்சம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் யாரிடமாவது பேசும் போது வார்த்தைகளில் கவனமாக பேச வேண்டும். பண விஷயத்தில் கவனம் வேண்டும்.
குருபெயர்ச்சி பலன்கள் 2023-2024 – Guru Peyarchi 2023 Palangal in Tamil
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |