மயில் இறகு வீட்டில் வைக்கலாமா.? | Mayil Thogai Veetil Vaikalama
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மயில் இறகை வீட்டில் வைக்கலாமா.? வைக்கக்கூடாதா.? என்பதையும், அப்படி வீட்டில் எங்கு வைத்தால் அதிஷ்டம் உண்டாகும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம்மில் பலருக்கும் வீட்டில் மயில் இறகை வைக்கலாமா.? வைக்கக்கூடாதா.? என்ற குழப்பம் இருக்கும். எனவே, அந்த குழப்பத்தை போகும் விதமாக இப்பதிவு அமையும்.
மயில் இறகை நாம் சிறு வயதில் பள்ளி புத்தகங்களில் வைத்து இருப்போம். புத்தகத்தில் மயில் இறகை வைத்தால் படித்து நன்றாக ஏறும் என்று சிறு வயதில் பேசி கொண்டிருப்போம். அதுமட்டுமில்லாமல், மயில் இறகு குட்டி போடும் என்றும் சொல்லியிருப்போம். உண்மையில், மயில் இறகு மங்களகரமான பொருள்.
மயில் தோகை வீட்டில் வைக்கலாமா.?

மயில் தமிழ் கடவுளான முருகப்பெருமானுடைய வாகனமாக இருக்கிறது. இதனால், மயில் இறகை வீட்டில் வைத்தால் நன்மை உண்டாகும். ஆகையால், மயில் இறகை எந்தவொரு பயமும் இன்றி வீட்டில் வைக்கலாம். அதனால், நன்மை மட்டுமே உண்டாகுமே தவிர தீமைகள் எதுவும் ஏற்படாது. அதிலும், குறிப்பாக பூஜை அறையில் முருகப்பெருமான் படத்திற்கு அருகிலேயே வைத்து வழிப்படலாம்.
மயில் இறகை வீட்டில் எங்கு எப்படி வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.?
- வாஸ்துப்படி, வீட்டின் வடகிழக்கு திசையில் மயில் இறகை வைக்கலாம். வடக்கில் வைப்பது மூலம் வாழ்வில் முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் உண்டாகும். அதேபோல், வீட்டின் மேற்கு திசையில் மயில் இறகை வைக்க கூடாது. மேற்கில் வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் பெருகும்.
- வீட்டில் பணம், நகை வைத்திருக்கும் இடங்களில் மயிலிறகு ஒன்றனை வைப்பதன் மூலம் செல்வம் பன்மடங்கு பெருகும்.
- வீட்டின் திருஷ்டி நீங்க, வீட்டின் தலைவாசல் பகுதியில் மயிலிறகை வைக்க வேண்டும்.
- அதுமட்டுமில்லாமல், வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்க, 8 மயில் தோகையினை எடுத்து, ஒரு வெள்ளை நூல் கொண்டு கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும். பூஜை செய்யும்போது, இந்த மயில் தோகையிற்கும் தீபாராதனை காண்பித்து ‘ஓம் சோமாய நமஹ’ என்று கூற வேண்டும். இவ்வாறு செய்தால், வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
- மயில் இறகை பூஜை அறையில், முருகப்பெருமான் படத்திற்கு அருகில் வைத்து வழிப்படலாம். இவ்வாறு செய்தால் முருகனுடைய அருளும் பக்தியும் கிடைக்கும்.
- அதுமட்டுமில்லாமல், சனி தோஷத்தை நீக்கும் இந்த மயில் இறகு. மூன்று மயில் தோகையை எடுத்து, கருப்பு நிற கயிறு கொண்டு கட்டி கொள்ளுங்கள். அடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொட்டைப்பாக்கு போட்டு ஊறவைத்து கொள்ளுங்கள். அதன்பிறகு, இந்த தண்ணீரை மயிலிறகு மேல் தெளித்து ‘ஓம் சனீஸ்வராய நமஹ!’ என்று கூற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சனி தோஷம் குறையும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |











