மார்ச் மாதம் இந்த ராசிக்காரர் தான் தொழில் ரீதியாக அசுர வளர்ச்சி அடைய போகிறார்கள்..! அது எந்த ராசி தெரியுமா..?

Advertisement

தொழில் முன்னேற்றம்

பொதுவாக நாம் புதிதாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது வேறு ஏதாவது சுபகாரியம் செய்ய போகிறோம் என்றாலோ நேரம் மற்றும் காலம் இரண்டும் நல்லதாக அமைய வேண்டும் என்று நம் வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். அதுபோல ஒரு மாதம் அல்லது வருடம் பிறக்கும் முதலில் தொழில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருடைய மனதிலும் இருக்கும். இந்த வகையில் மார்ச் மாதம் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்து நல்ல நிலைக்கு வரக்கூடிய ராசிக்காரர்களும் இருக்கிறார்கள். அது என்ன ராசி என்றால் மீன ராசி தான். நீங்களும் மீன ராசிக்காரர் என்றால் மார்ச் மாதம் உங்களுக்கு எந்த மாதிரியான முன்னேற்றங்கள் தொழிலில் ரீதியாக ஏற்பட இருக்கிறது என்று இந்த பதிவை தொடர்ந்து படித்து பயன்பெருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா..?

மீன ராசி தொழில்:

மீன ராசி தொழில்

ராசியில் 12-வது ராசியாக கடைசியில் அமைந்துள்ளது மீன ராசி தான். இந்த மீன ராசியில் ரேவதி, உத்திரட்டாதி மற்றும் பூரட்டாதி போன்ற மூன்று நட்சத்திரங்கள் அமைந்துள்ளது.

இத்தகைய மீன ராசிக்காரர்களுடைய ராசியில் மார்ச் மாதம் சுக்கிரன் மற்றும் குருவும் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும், செவ்வாய் அதிர்ஷ்ட ஆயுள் ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கிறார்கள். மேலும் கேது லாப ஸ்தானம் என கிரகங்கள் மாற்றம் அடைய இருக்கிறது. 

மீன ராசியில் கேது லாபம் ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய வியாபாரம் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் வெற்றி பெரும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் தொழில்:

மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் மாதம் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். மேலும் உங்களுடைய தொழிலில் வேறு எந்த விதமான போட்டிகள் எதுவும் இல்லாமல் வியாபாரத்தில் உயர்ந்து கொண்டே இருப்பீர்கள்.

நீண்ட நாட்களாக இருந்த கடன் தொல்லை அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் தொழில் ரீதியாக அடுத்தநிலைக்கு போவது பற்றி சிந்திப்பதற்கும் மார்ச் மாதம் உகந்த மாதமாக இருக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

பூரட்டாதி நட்சத்திரம் தொழில்:

மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரம் 4-வது பாதம் மட்டும் அமைந்துள்ளது. உங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திரன் உடைய பார்வையால் பணவரவும் மற்றும் கேதுவின் பார்வையால் தொழில் லாபமும் அதிகரிக்கும் வாய்ப்பு மார்ச் மாதம் உங்களுக்கு உள்ளது.

உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருந்தாலும் கூட எந்த செயலிலும் பொறுமை மற்றும் முயற்சி அதிகஅளவு இருக்க வேண்டும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரம் தொழில்:

12 ராசிகளில் கடைசி ராசியாகவும் மற்றும் 27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமாகவும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் உள்ளது. நீங்கள் மார்ச் மாதம் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்களுடைய ராசியில் கேது பகவான் லாபம் ஸ்தானத்தில் சஞ்சரித்து உள்ளார்.

வியாபரத்தில் வெற்றி, புதிதாக வீடு மற்றும் மனை வாங்குவது என்று நிறைய சுபகாரியங்கள் நடக்கும் என்று உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரம் படி ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

மேலும் உங்களுடைய ராசியின் படி நல்ல முன்னேற்றம் இருப்பதால் எதையும் முயற்சிக்காமல் அலட்சியமாக இருக்க கூடாது. விட முயற்சியும் கண்டிப்பாக தேவை. அப்போது தான் வெற்றி பெற முடியும். 

மிதுன ராசி என்ன தொழில் செய்யலாம்? எந்த தொழில் செய்யக்கூடாது?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement