வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மீன ராசிக்கு பொருத்தமான கல், நிறம், எண் எது தெரியுமா.?

Updated On: February 12, 2025 12:24 PM
Follow Us:
meena rasi kal mothiram
---Advertisement---
Advertisement

மீன ராசி கல் மோதிரம் | மீன ராசி அதிர்ஷ்ட கல்

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே கை விரலில் மோதிரம் அணிகின்றனர். இந்த மோதிரத்தை மோதிர விரலில் தான் அணிய வேண்டும் என்கின்றனர். தங்கம் மோதிரம் இல்லையென்றால் வெள்ளி மோதிரம் அணிகின்றனர். ஆனால் இப்பொழுது காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டைலாக மோதிரத்தை அணிகின்றனர்.

ஆன்மிகத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு உரிய கற்கள் மோதிரத்தை அணிய வேண்டும் என்கின்றனர். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் மீன ராசிக்காரர்களுக்கு உரிய கல் மோதிரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

மீன ராசி கல் மோதிரம்:

 மீன ராசி கல் மோதிரம்

மீன ராசியில் பிறந்தவர்கள் கனகபுஷ்பராகம், முத்து, வைரம் போன்ற கற்களை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம். வியாழக்கிழமையன்று தங்கத்தில் அல்லது செம்பில் கற்களை பதித்து ஆள்க்காட்டி விரலில் அணிய வேண்டும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா

இந்த கல் அணிவதால் மீன ராசிகாரர்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும். வாழ்க்கையில் கம்பீரம் உண்டாகும். எந்த செயலையும் பயம் இல்லாமல் துணிச்சலோடு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுக்கு திருமண தொடை ஏதும் இருந்தால் அவை நீங்கி நல்ல வரன் அமையும். நீங்கள் அதிகமாக கோபப்படும் குணம் உடையவர்களாக இருந்தால் இந்த கற்கள் பதித்த மோதிரம் அணிவதன் மூலம் கோப நிலையானது குறையும். நட்பு வட்டாரம் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். புதிதாக நிலம், வாகனம், வீடு போன்றவை வாங்குவீர்கள்.

மீன ராசி அதிர்ஷ்ட நிறம்:

மீன ராசி அதிர்ஷ்ட நிறம்

மீன் ராசிக்காரர்களுக்கு சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் ராசியான நிறமாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தில் நீங்கள் ஆடைகள் அணிவதன் மூலம் அமைதியாக இருப்பீர்கள். மஞ்சள் நிற ஆடை அணிவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். இந்த நிறத்தில் ஆடை இல்லையென்றாலும் நீங்கள் வாங்கும் ஆடையில் இந்த நிறம் இருக்கும் படி பார்த்து வாங்க வேண்டும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா 

மீன ராசி அதிர்ஷ்ட எண்:

மீன ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 3 & 7 வரையிலான அனைத்து இரட்டை இலக்க எண்கள் அதாவது 12, 43, 34, முதலியன. இந்த எண்களை பயன்படுத்துவதால் வேலைகளில் உள்ள சிரமங்களை சமாளிப்பதற்கு உதவுகிறது.

மீனா ராசிக்கு உரிய கல், நிறம், எண் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

  • அனைவரும் விரும்ப கூடிய ஆளுமை திறன் காணப்படும்.
  • உங்கள் வாழ்க்கையில் வெளி வட்டாரத்தில் மதிப்பு மற்றும் புகழ் அதிகரிக்கும்.
  • எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.
  • நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் வெற்றி அடைவதற்க்கு உதவுகிறது.
  • செல்வ செழிப்போடு வாழ்வதற்கு உதவுகிறது.

மீன ராசி ரேவதி நட்சத்திரம் ராசி கல்:

மீன ராசியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கல் ராசியானதாக இருக்கும. அதனை பற்றி காண்போம்.

  • ரேவதி நட்சத்திரம்: மரகதம்
  • பூரட்டாதி நட்சத்திரம் : புஷ்பராகம்
  • உத்திரட்டாதி நட்சத்திரம்: நீலம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now