வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மீனத்தில் 6 கிரகங்கள் சேர்வதால் உங்க வீட்டை தேடி லட்சுமி தேவி வரப்போகிறாள்..

Updated On: March 4, 2025 11:11 AM
Follow Us:
meena rasiyil 6 kiragangal serkai march 2025
---Advertisement---
Advertisement

Meena Rasiyil 6 Kiragangal Serkai March 2025

ஆன்மிகத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தங்களின் ராசியை மாற்றி கொள்வார்கள். அப்படி மற்றும் போது நன்மையும் நடக்கும், தீமையும் நடக்கும். இந்த பலன்கள் நடக்கும் கிரங்களை பொறுத்து மாறுபடும். இப்படி நடக்கும் பெயர்ச்சியினால் எல்லா ராசிகளுக்கும் பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலன்களை அள்ளி கொடுக்கும்.

அந்த வகையில் மீன ராசியில் 6 கிரகங்கள் சேர உள்ளது. மீன ராசியில் ஏற்கனவே ராகுவும், புதனும், சுக்கிரனும் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி சூரியனும் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் மார்ச் 28 ஆம் தேதி சந்திரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதனை தொடர்ந்து மார்ச் 29 ஆம் தேதி சனி பகவானும் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ராகு, புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், சனி 6 கிரகங்கள் சேர இருக்கிறது. இந்த சேர்க்கையானது 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.  இந்த பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு மட்டும் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.

தனுசு:

மீனத்தில் 6 கிரகங்கள் சேர்க்கை

தனுசு ராசியில் 4-வது வீட்டில் 6 கிரகங்கள் பெயர்ச்சி அடைய இருக்கிறது. இந்த பெயர்ச்சியினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் விலைமதிக்க கூடிய பொருட்களை வாங்குவீர்கள். அதாவது கார், வண்டி , வீடு, நிலம் போன்றவற்றைவாங்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் வாழ்க்கையில் நீண்ட காலமாக ஏதும் பிரச்சனைகளோ அல்லது பணம் சம்மந்தப்பட்ட விஷயமோ முடிவுக்கு வராமல் இருந்தால் அவை இந்த நேரத்தில் முடிவுக்கு வரும். உங்களின் துணையிடம் இருக்கும் உறவானது பலப்படும். அலுவலகத்தில் வேலை பார்பவர்களாக இருந்தால் உங்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். மேலும் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் பணவரவு அதிகரிக்கும். இதனை நீங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக முதலீடு செய்வீர்கள்.

உங்க வீட்டு கதவை திறந்து வைங்க அதிர்ஷ்டம் வர போகிறது.. யார் யாருக்கு தெரியுமா.?

கடகம்:

மீனத்தில் 6 கிரகங்கள் சேர்க்கை

கடக ராசியில் 9-வது வீட்டில் 6 கிரகங்கள் பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியினால் உங்களின் வாழ்க்கையே மாற போகிறது என்றே கூறலாம்.  அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க போகிறது. மேலும் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதும் இருந்தால் அவை முடிவுக்கு வரும். உங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் வெளிவட்டாரத்தில் உங்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பு அதிகரிக்கும். பணி சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள்இவை உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் அதிகமாக பங்கேற்பீர்கள். இதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருந்தாலும் அதற்கேற்ற பணம் கையில் இருக்கும். மேலும் நாம் செய்தது நாளை நமக்கு இரண்டாக வரும் என்பதால் தேவைகளுக்கு நன்றாக செய்வீர்கள்.

மிதுனம்:

மீனத்தில் 6 கிரகங்கள் சேர்க்கை

மிதுன ராசியில் 10 வது வீட்டில் 6 கிரகங்களின் சேர்க்கை நடக்க இருக்கிறது. இதனால் உங்களுக்கு எல்லா விதத்திலும் நன்மைகள் மட்டுமே நடக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களின் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றத்தை காண்பீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  உங்களின் உழைப்புக்கான அங்கீகாரம் பணியில் கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் சக பணியாளர்கள் உங்களை மதிப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதனால் உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் ஏற்கனவே ஏதும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து லாப தொகை கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் அவை மேம்பட்டு எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களின் தந்தையிடம் ஏதும் பிரச்சனை இதுவரை இருந்தால் அவை நீங்கி உங்களின் உறவுகள் ஆனது மேம்படும்.

சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now