Meenam Rasi Palan 2024 in Tamil
பொதுவாக இந்த உலகில் மனிதர்களாக பிறந்த நாம் அனைவருக்குமே எதிர்காலத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்தவகையில் பிறக்கவிற்கும் 2024 -ஆம் ஆண்டு எப்படி அமையும் என்று இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வரவிருக்கும் 2024-ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன நல்ல பலன்களை அளிக்கப்போகின்றது என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மேலும் வருகின்ற 2024-ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த போகின்றது அப்படி ஏற்படும் அந்த மாற்றங்களால் மீன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்குமா.! தீமைகள் கிடைக்குமா.! என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க.
தொழில் மற்றும் வியாபாரம்:
மீன ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் புத்தாண்டான 2024-ஆம் ஆண்டு தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக அளவு சிறப்புகளை அள்ளித்தர போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் மற்றும் சூரியன் போன்ற கம்பீரமான கிரகங்கள் உங்களது பத்தாம் வீட்டில் இருந்து கொண்டு உங்களுக்கு நல்ல பலனை அளிக்க போகிறார்கள்.
அதேபோல் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நீங்கள் மிக பெரிய பதவி ஒன்றை பெறுவீர்கள். அதேபோல் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். ஆண்டின் இறுதி காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் மற்றும் பொறுமை அவசியம்.
நிதிநிலைமை:
இந்த 2024-ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களின் நிதிநிலைமை சில ஏற்ற இறக்கங்களுடனே காணப்படும். அதாவது இந்த ஆண்டு முழுவதும் உங்களது சனி பகவான் உங்கள் பன்னிரண்டாவது வீட்டில் இருக்கின்றார். இதனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும்.
அதேபோல் ஆண்டு முழுவதும் வரவு மற்றும் செலவுகள் கலந்தே காணப்படும். அதனால் உங்களுக்கு கிடைக்கும் நிதியை சரியான முறையில் நிர்வாகிக்க வேண்டும்.
கன்னி ராசி 2024 எப்படி இருக்கும்
கல்வி:
மீன ராசி மாணவர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கிரகங்களின் நிலை காரணமாக, நீங்கள் முழு மனதுடன் கல்வியைத் தொடர்வீர்கள், உங்கள் சவால்களை சமாளிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
ஆனால் ஆண்டின் இறுதியில் நீங்கள் உங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சில தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் மாணவர்கள் உங்களது படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குடும்பம்:
உங்களது குடும்ப வாழ்க்கை 2024-ஆம் ஆண்டு மிக மிக சவால்கள் நிறைந்து காணப்படும். ஆனால் குரு பகவான் உங்கள் இரண்டாவது வீட்டில் தங்கியிருப்பது, குடும்ப பிரச்சனைகளை தீர்க்க உதவும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் நல்லிணக்கம் மேம்படும்.
மேலும் உங்களது செல்வாக்கு மற்றும் நல்ல பேச்சு மூலம் மற்றவர்களின் மனதை வென்று குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பீர்கள். சனி பகவானின் பார்வை உங்கள் இரண்டாவது வீட்டில் இருக்கும் ஒரு சில நேரங்களில் குடும்பத்தில் மிக மிக அதிகமான பிரச்சனைகள் வந்து வந்து மறையும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |